வாய்மொழியற்ற மெளனங்களின் வார்த்தைகள்... ஜல்லிக்கட்டு (இறுதி அத்தியாயம்)
எழுத்தாளர் லதா சரவணன் வழங்கும் பொங்கல் சிறப்பு மினி தொடர் கதை.. ஜல்லிக்கட்டு. இது இறுதி அத்தியாயம்.
-லதா சரவணன்
ஜல்லிக்கட்டுக்கு தயாராவதற்கு என்று காளைகளுக்கு அலங்கரிக்கப்பட்டு, அதன் கொம்புகள் எல்லாம் கூர்மையாக சீவி விடப்பட்டது. வீரய்யன் பொங்கல் திருநாளின் புதுமையில் அழகாய் மங்கலாய் அலங்கரித்துக்கொண்டு நின்ற வள்ளியைப் பார்த்து மெல்லச் சிரித்தான். நான் போயிட்டு வர்றேன் என்று கண்களாலேயே விடைபெற்றான். திவ்யா வீரய்யனுக்கும், பாண்டிக்கும் ஆரத்தி எடுத்து பொட்டிட்டாள். லட்சுமி நான் முன்னாடி போறேன். நீ கொஞ்ச நேரம் கழித்து பின்னாலே வந்திடு,. உனக்கும் உன் வீரய்யனின் விளையாட்டைப் பார்க்க ஆவலாய் இருக்கும் இல்லையா ? என்று வள்ளியின் முகத்தோடு முகம் வைத்து தேய்துவிட்டு சென்றாள். அன்போடு அழைக்கும் அந்த குழந்தையின் வாழ்வில் இன்று நடக்கப்போகும் மங்கல நிகழ்வும் அதற்கடுத்து தனக்கும் வீரய்யனுக்கும் நடக்கும் நிகழ்வும் வெட்கத்தை அப்பிப் பூசச்செய்தது. வள்ளியும் கிளம்பிடத் தயாரானாள். கொட்டிலை விட்டு கிளம்புகையில் பண்ணையாரின் குரல் காதைக் கிறீயது.

அவர்கள் இருவருக்கும் இடையில் நடைபெற்ற வார்த்தைகளைக் கேட்டதும், வள்ளி திகைத்துபோனாள். பொன்னைய்யன் காளையின் கொம்பை கூர்மையாக சீவிவிட்டு எண்ணெய்யோடு விஷத்தையும் சோத்து தடவியிருக்கிறானாம். தண்ணீர் காட்டும்போது கூடவே மதுவையும் சேர்த்து தந்திருக்கிறான். நிச்சயம் காளை நிதானத்தில் இருக்காது சீறிப்பாயும் அப்ப பாண்டியில்லே யார் வந்தாலும் அவங்க கதி அதோ கதிதான்.
கடவுளே ! இதென்ன கொடுமை, அய்யய்யோ என் கையை வைத்து கண்ணைக் குத்துகிறார்களே நடப்பதை எப்படியாவது தடுத்து நிறுத்திட வேண்டும் என்று ஓடினாள் வள்ளி
புளியங்கொம்பினால் வளையம் செய்து கழுத்தில் அணிவிக்கப்பட்ட காளைகள் திமிர்த்தனத்தோடு காட்சியளித்தது, பணமுடிப்பும், பரிசுகளும் மேடையில் குவிந்துகிடக்க ஊர்பெரியவர்களோடு பண்ணையாரும் நடுநாயகமாய் அமர்ந்திருந்தார். அவ்வப்போது பொன்னய்யனின் பக்கம் அவர் பார்வை போய் வந்தது, எல்லாம் சரியாக நடக்கவேண்டுமே ?! அவன் திமிறிக்கொண்டு இருந்த வீரய்யனை பார்த்தான். அந்தக் கண்களில் ஒரு வெறி இருந்தது. ஏதோ உடம்பெல்லாம் முறுக்கேறியது. யாரைப் பார்த்தாலும் சீறிப்பாய வேண்டும்போல் தோன்றியது வீரய்யனுக்கு. ஏன் இப்படி ? கொல்லைப்பக்கம் இருந்து வரும்போது கூட இந்த கோபம் மனதில் இல்லையே ? வள்ளி என்ன சொல்லி அனுப்பினாள். ஜல்லிக்கட்டில் பாண்டியிடம் தோற்றுவிடு அவர்களின் காதல் ஜெயித்துவிடும் நாமும் இணையலாம் என்று சத்தியம் வாங்கியிருக்கிறாளே ? வள்ளியின் நினைவும் முகமும் மனக்கண் முன் தோன்றியதும், அவனின் எண்ணம் சிதைந்தது மனதிற்குள் மதர்ப்பு விலகி ஒரு வித அமைதி குடிகொண்டது.
வாடி வாசல் வழியாக காளைகள் சீறிவந்தது. ஒலிப்பெருக்கியில் பாடல்கள் கதறின. யாருடைய காளை என்ன பரிசு என்று அறிவித்துக் கொண்டே இவ்வளவு என்று அறிவித்துக்கொண்டே இருந்தார்கள். அடுத்து ... பண்ணையாரின் பொலிகாளை வீரத்தின் திருவுறு காளை வீரய்யன் என்று அறிவிக்கப்பட்டது. யாருய்யா அடக்குவது. திடலில் பாண்டி வந்து நின்றான். உழைத்து உழைத்து உறமேறிய உடம்பு தலையில் சிகப்புத் துண்டும், இடுப்பில் வேட்டியையும் இறுக்கி கட்டியபடி நின்றான் அவன் கருத்த உடம்பில் வெய்யில் பட்டு மின்னிய வியர்வைத் துளிகள் வைரத்துளிகளால் ஜொலித்தது. கண்களால் பார்வையாளர்கள் பக்கம் மேய்ந்தான். ரோஜா கல்யாணப்பெண்ணைப் போல நின்றுகொண்டிருந்தாள். கலக்கமும் மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் ஒருசேர அந்தக் கண்களில் மின்னியது. வெற்றிபெறுவேன் மாலை சூடுவேன் என்று உறுதி மொழி தருவதைப் போல ஒருமுறை கண்களை அழுந்த மூடிவிட்டுத் திறந்தான். வாடிவாசல் வழியாக காளை சீறிக்கொண்டு வந்தது.
டேய் தயாரா இருக்கியா ?
பயமா இருக்குடா, நாம மாடு மேல மிளகாய்ப்பொடி தூவுவதை யாராவது பார்த்திட்டா
போடா லூசு உனக்கு பயமா இருந்தா நீ போ, அந்த மைனரு அவன் தோட்டத்திலே மாங்காய் அடிச்சதுக்கு கட்டி வைச்சு தோலை உரிச்சானே உனக்கு நினைவு இல்லை, இப்போ அவன் மாடுதான் அடுத்ததாய் போகப்போகுது, அதுக்கு அடியிலே நான் பொடி தூவுனா அதுக்கு கண்ணுமன்னு தெரியாம ஆக்ரோஷமா ஓடும். வலிதாங்காம கீழே விழும் அப்போ அவன் அசிங்கப்படுவான் இல்லை,
திடலுக்குள் நுழைந்திட்ட வள்ளியின் கண்கள் வீரய்யனைத் தேடின. வீரய்யனின் திமிலைப் பிடித்தபடி ஓடிக் கொண்டு இருந்தான் பாண்டி அதன் எண்ணெய் வழுவழுப்பில் ஒருதரம் கீழே விழுந்தான். பிறப்புறுப்பில் மிளகாய் தூவிய மைனரின் காளை வேகமாய் ஓடிவந்தது?! வீரய்யனை எதிர்பார்த்து நின்ற வள்ளியைக் குறிபார்த்து? அவள் தன்னை நோக்கி வரும் ஆபத்தை அறியவில்லை, பாண்டி- ரோஜாவின் காதலை எப்படியாவது சேர்த்துவிடவேண்டும் என்ற எண்ணமும் அதற்கு தடையாய் தன்னையும் அறியாமல் மாறிவிட்ட வீரய்யனையும் நோக்கியே மனம் இருந்தது?
நிமிடத்திற்குள் எல்லாம் முடிந்து விட்டது?! வள்ளி நிலைகுலைந்து கீழே கிடந்தது? ரத்தம் பீய்ச்சிக்கொண்டு இருக்க வள்ளி உடல் முழுக்க, சிகப்பாய் நனைத்தது, அய்யய்யோ என்று ஆங்காங்கே கூக்குரல் ஒலித்தது.வீரய்யன் திமிறிக்கொண்டு பாண்டியைத் தள்ளிவிட முயன்றது. வள்ளி கதறிக்கொண்டு இருப்பது தெரிந்தது. அதன் உடல் வலி மிகுதியில் தூக்கிப்போட்டது விழிகள் கண்ணீரில் நிரம்பிய போதும், பாண்டியின் கைகளில் அகப்பட்டு கிடந்த வீரய்யனின் விழிகளை தீண்டின. வாய்மொழியற்ற மெளனங்களின் வார்த்தைகள் காற்றில் கரைந்து கொண்டு இருந்தது?! அதன் விழிகளின் ஜீவன் மங்கிக்கொண்டே வந்தது.
பாண்டியின் பிடி இறுகிக்கொண்டே வந்தது. வீரய்யனோ வள்ளியிடம் எப்படியாவது சென்றுவிட வேண்டும் என்ற வேதனையில் தன் கொம்பை இலேசாக அசைத்து பாண்டியினை நோக்கி நகர்த்தியது. சுருக்கென்று வலியில் இடுப்பைப் பிடித்தபடி மல்லாந்து விழுந்தான் பாண்டி.....?! வீரய்யன் வேகமாய் சென்று வள்ளியிடம் நின்றான். வள்ளியின் கண்கள் நிலைகுத்தி நின்றது. அதில் வீரய்யனின் உருவம் தெரிந்தது,
முற்றும்
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications