நாம் எங்கே போகிறோம்?: துபாயில் இன்று சிறப்பு சொற்பொழிவு
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் இன்று மாலை பேராசிரியர் முனைவர் பீ.மு. மன்சூர் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
துபாய் சுன்னத் வல் ஜமாஅத் சார்பில் துபாய் அஸ்கான் டி பிளாக்கில் (அல் முத்தீனா) இன்று மாலை இஷா தொழுகைக்குப் பிறகு 8.30 மணியளவில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி துணை முதல்வர் (ஓய்வு) கம்பம் பேராசிரியர் முனைவர் பீ.மு. மன்சூர் அவர்கள் 'நாம் எங்கே போகிறோம்?‘ எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர், ஜமால் முஹ்யித்தீனை 055 800 79 09 / 050 51 96 433 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
பேராசிரியர் முனைவர் பீ.மு. மன்சூர் அவர்களின் தொடர்பு எண் : 052 83 98 332












Click it and Unblock the Notifications