தமிழக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, பெஸ்வாடா வில்சனுக்கு 'ஆசியாவின் நோபல்' மகசேசே விருது
டெல்லி: ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் ராமன் மகசேசே விருதுகளுக்கு இந்தியர்களான கர்நாடகா இசைக் கலைஞர் டி.எம் கிருஷ்ணா, சமூக ஆர்வலர் பெஸ்வாடா வில்சன் மற்றும் 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் புகழ்பெற்ற அதிபராக விளங்கியவர் ரமோன் மகசேசே. 1957 ஆம் ஆண்டில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். மறைந்த ரமோன் மகசேசே நினைவாகவும், அவரது அரசியல் நேர்மை, மக்கள் சேவை இவற்றை எடுத்துக்காட்டாக வளரும் நாடுகளில் பரப்பவும் இந்த விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது.

2016-ம் ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் இரண்டு இந்தியர்கள் உட்பட 3 நபர்கள், 3 அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவைச் சேர்ந்த டி.எம் கிருஷ்ணா, பெஸ்வாடா வில்சன் ஆகியோருக்கு ரமோன் மகசேசே விருது வழங்கப்படுகிறது. கலைக்குள் சமூக நலத்தை உட்புகுத்தி வருவதாக கர்நாடகா இசைக் கலைஞர் டி எம் கிருஷ்ணாவிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது. டி எம் கிருஷ்ணா சென்னையில் பிறந்தவர்.
கர்நாடாக மாநிலத்தில் தலித் குடும்பத்தில் பிறந்தவர் பெஸ்வாடா வில்சன். சமூக ஆர்வளரான பெஸ்வாடா வில்சன் இந்த ஆண்டுக்கு மகசேசே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மற்றொரு இந்தியர் ஆவார்.
மேலும் டோம்பெட் த்வாஃபா, ஜப்பான் ஓவர்சீஸ் கார்பரேஷன் தன்னார்வலர்கள், கோன்சிட்டா கேர்பியோ - மொரேல்ஸ் மற்றும் வியென்டைன் ரெஸ்க்யூக்கு இந்த ஆண்டின் மகசேசே விருதுகள் வழங்கப்படுகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications