சிங்கப்பூரில் குழந்தை காப்பக்கத்தில் இஃப்தார் நிகழ்ச்சி நடத்திய தோப்புத்துறை முஸ்லிம் சங்கம்
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பழமையான சங்கங்களில் ஒன்றான தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் (சிங்கப்பூர்)-TMASன் ஏற்பாட்டில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி கடந்த 5ம் தேதி மாலை 6 மணி அளவில் ஜாமியா குழந்தைகள் காப்பகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் 94 ஏழை மாணவர்கள், சிங்கப்பூர் வாழ் தோப்புத்துறை வாசிகள், ஏனைய சமுதாய மற்றும் சமய தலைவர்கள் என சுமார் 300 நபர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

உஸ்தாத் ஜகபர் சாதிக் அவர்களின் பயானுக்கு (மார்க்க சொற்பொழிவு) பிறகு மதரஸா டிஎம்ஏஎஸ்-இன் மாணவர்கள் ஹாருண் மற்றும் சராபத் ஆகியோரின் கிராத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. சங்கத் தலைவர் ஹாஜி டாக்டர் கே. எம். தீன் அவர்களின் தலைமை மற்றும் வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஜாமியா சிங்கப்பூரின் துணை தலைவர் டாக்டர் சலீம் அவர்களின் உரையை தொடர்ந்து கௌரவ விருந்தினர் இணைப் போராசிரியர் முகமத் பைசல் இப்ராஹிம் (நாடாளுமன்ற செயலாளர்- சுகாதார மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகம், நாடாளுமன்ற உறுப்பினர், நீசூன் குழு தொகுதி-மத்திய நீசூன்) அவர்கள் கௌரவிக்கப்பட்டு உரை நிகழ்த்தினார்கள். அதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் அல்ஹாஜ் எம். பஷீர் அஹமது (மாநில தலைவர், இந்திய தேசிய லீக்) அவர்கள் கௌரவிக்கப்பட்டு உரை நிகழ்த்தினார்கள்.

ஜாமியா குழந்தைகளின் துவாவிற்கு பிறகு ஜாமியா மாணவர் பாங்கு கூற அனைவரும் நோன்பு திறந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சங்க நிர்வாகிகளும், இளைஞர் அணியினரும் சிறப்பாக செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications