அசத்தலான தமிழ்நாடு அறக்கட்டளை ஹூஸ்டன் கிளையின் இணைய வழி குழந்தைகள் தின நிகழ்ச்சி
ஹூஸ்டன்: அமெரிக்காவின் தமிழ்நாடு அறக்கட்டளை - ஹூஸ்டன் கிளையானது இணையம் வழியாக குழந்தைகள் தின நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியது.
தமிழ்நாடு அறக்கட்டளை - ஹூஸ்டன் ஏற்பாடு செய்த இந்த விழாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்றனர். சுமார் நான்கு மணி நேரம் தங்கு தடை இன்றி ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த கிளையின் சார்பாக, "வர்ண ஜாலம்" சிறார்கள் வண்ணம் தீட்டும் போட்டி, "ஆடல் அரங்கம்" நடனப்போட்டி, "இசையருவி" பாட்டு போட்டி, மற்றும்பெரியவர்களுக்கு கோலப்போட்டியும், கருத்தரங்கமும் நடத்தப்பட்டன. வயது வாரியாக (8-13; 14-18) நடத்தப்பட்ட இசையருவி போட்டியின் வெற்றியாளர்களை சூப்பர் சிங்கர் மூக்குத்தி முருகன் அவர்கள் தேர்ந்தெடுத்தார்.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஹூஸ்டன் கிளையின் தலைவி திருமதி மாலா கோபால் அனைவரையும் வரவேற்று, தமிழ்நாடு அறக்கட்டளையின் துவக்கம் மற்றும் குறிக்கோள்களை விவரித்தார். இவரை தொடர்ந்து செயலாளர் டாக்டர் நளினி பாலச்சந்திரன் ஹூஸ்டன் கிளையின் தனித்துவம், சிறப்பு அம்சங்கள், ஆகியவற்றை விளக்கினார்.

காசாளர் திருமதி புனிதா தங்கராஜ் அவர்கள் கிளையின் வரவு செலவு மற்றும் நன்கொடை மூலம் சேரும் நிதியை பற்றி விவரித்தார். இந்த குழந்தைகள் தின நிகழ்ச்சியை ஒரு நிதி திரட்டும் விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜூம் செயலியின் மூலமாக ஐம்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இணையம் வழியாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக "2021ஆம் ஆண்டு எப்படி இருக்கும்" என்ற கருத்தரங்கம் அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications