நான் நல்லவன்
பகலில் நான் பார்க்கும் பெண்களெல்லாம்
இரவில் என் படுக்கையறையின் பக்க ஏடுகள்
பள்ளியில் பார்த்த பெண்களில் அழகானவளுடன்
பள்ளி கொள்ள அங்கம் பருகுவேன்.
என்னிடம் இருக்கும் நண்பனெல்லாம் -- என்
சுயநலத்திற்க்காண போர்வைகள்
பணத்தேவையின்போது பாசம் காட்டுவேன்
குணத்தேவையின்போது குரங்காவேன்.
காதலி, என் பொய் முடிச்சின் அவிழ்ப்பு
நினைக்கும்போது நீலிகண்ணீர் வடிப்பேன்
உன்னை மட்டுமே காதலிக்கிறேன் -- நான்
காதலிக்கும் முதல் (றாவது) பெண் நீ
அன்னை எனது தஞ்சாவூர் பொம்மை
மகன் சொல் மிக்க மந்திரமில்லை
ஏப்ரல் மேயிலும் எக்ஸாம் - கறப்பேன்
கணக்கிலடங்கா கரன்சி
ஆசிரியர்க்கு நான் நாய் வால்
அவரின் உதடு ஒட்டா குறள் என் மனதில் ஒட்டா
இருப்பினும் வாத்தியார் போய் டீச்சர்
வரவேண்டும் என ஏங்கும் என் மனம்
என் வீட்டு தொலைபேசி
சிங்கத்திடம் மாட்டிய எலி
பேசும் பொய்யை பிசகாமல் கொண்டு சேர்க்கும்
உண்மையில்லா வார்த்தைக்கு உருகொடுக்கும்.
கடவுள் என் சவாலே சமாளி -- என்
அடை வெள்ளத்தின் தடை பள்ளம் அவன்
எனக்கே நாலைந்து வீடுதான் தெரியும்
அப்பன் முருகனுக்கோ ஆறுபடைவீடு
இந்த உலகம் என் நாடக மேடை
அதில் நான் மட்டுமே வில்லன்
ஆனால் பாவம் - நம்பிக் கொண்டு
இருக்கிறார்கள் நான் நல்லவன் என்று.
- பாக்கியராஜ்([email protected])
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications