நாம் இப்பொழுது...
என்ன செய்துகொண்டிருப்பாய் நீ
நீ நடந்த வீதிகளின்
ஒவ்வொரு அங்குலத்திலும்
உன் நினைவுகளை
நான் சேகரித்துகொண்டிருக்கும்பொழுது!
யாருடைய தோள்களில்
நீ சாய்ந்திருப்பாய்
"என் மனம், மெய், உயிரெல்லாம் நீயெ" என
தொடங்கும் உன் பழைய கவிதை படிக்கும்பொழுது!
எந்த குடையின் கீழ்
ஒதுங்கியிருப்பாய்
யாருமற்ற பாலையில்
தொடர்ந்து விழும் சாரல்
உன் நினைவை என்மேல்
தெளிக்கும்பொழுது!
புணர்ச்சியின் எத்தனையாவது
தளத்தில் நீ நிற்பாய்
காமம் தலைக்கேறி நான்
கட்டிய மனைவியின்
கரம் பற்றும்பொழுது!
உன் குழந்தைக்கு என்ன
கதை நீ சொல்லிகொண்டிருப்பாய்
கானல் நீரான நம் காதலை
என் ஒரு மாத குழந்தைக்கு சொல்கையில்!
- பாஷா([email protected])

இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications