வசந்தம் வருமா?
Subscribe to Oneindia Tamil
வசந்தத்தின் முதற்குரல்
குயிலோசை;
இன்னும் கேட்கவில்லை.
போன வசந்தத்தைப் போலவே
இம்முறையும்
அவை
வரவில்லை.
எழுப்பிய குரலுக்கு
எதிர்க்குரலின்றி,
பிசிறடிக்கிறது
குரல்வளை.
ஏனோ
மெளன அஞ்சலிபோல்
சிறு சலசலப்புமின்றி
தூங்கிக் கொண்டிருக்கிறது
வனம்.
சருகுகள்
மிதிபடும் ஓசையில்
விழித்துக்கொள்கின்றன
மரங்கள்.
இற்றைப்போல்
ஒரு வசந்தத்தில்
குயில்களின்
குரல்வளை நெரித்தவர்கள்
வந்தார்கள்.
வண்ணக் கற்றைகளை
வாரியிறைத்தனர்.
மரங்களின் உச்சியில்
மின்விளக்கேற்றினர்.
காடே அதிரும்படி
முழங்கினார்கள்.
இனியெம் வாழ்வில்
வசந்தம் தானென்று;
அவர்களின்
ஒவ்வொரு செயலிலும்
காட்டை மகிழ்விக்கும்
முயற்சி தெரிந்தது.
குயில்கள் இல்லாவிடினும்
வசந்தம் வருமென்று
காட்டின் மரங்களை
நம்பவைக்க முயன்றனர்.
ஆரவாரப் பேய்கள்
அடங்கிய பின்னும்
அமைதியாக...
தூங்கிக் கொண்டிருந்தது
காடு.
குயிலோசையை
எதிர்பார்த்து!
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications