தேடிக் கொண்டிருக்கிறேன்- ஈழநாதன்
Subscribe to Oneindia Tamil
தேடாதீரென மடலெழுதி
நள்ளிரவில் கரைந்த
அக்காவை,
தேடிக்கொண்டிருக்கிறேன்.
கைக்கு
அரைத்திட்டு அழகுபார்க்க
காட்டில்
மருதாணி இருக்குமா
கேட்கவேண்டும்.
இரவில்
ஒண்ணுக்குப் போவதற்கு
என்னைப்போல்
யார் துணை வருவார்?
அப்பாவுடன்
அடிபட்டு வாங்கிய
காதுத் தோட்டை,
ஏன்
கழற்றிவிட்டுப் போனாள்?
செத்துப்போன பூனைக்குட்டிக்கு
மூன்றுநாள்
உண்ணாவிரதமிருந்தவள்
தோழியர் சாவுக்கு
என்ன செய்வாள்?
இப்போதும்
சின்னச் சின்ன
சண்டைகளுக்காக
யாருடனாவது
நாட்கணக்கில் பேசமாட்டாளா?
பரம எதிரி
கரப்பான் பூச்சிகளுடன்
எப்படி
ஒப்பந்தம் செய்திருப்பாள்?
ஒவ்வொருமுறையும்
தலைக்கு மேல்
குண்டுகள் பாயும்போது
ஆலடிப் பிள்ளையாருக்கு
நேர்த்தி வைப்பாளா?
இரத்தத்தைப் பார்த்து
எப்போதும் போல
மயங்கி விழுவாளா?
விடைகாணா வினாக்களுடன்
தேடாதீரென மடலெழுதி
திடீரெனக்
காணாமற்போன
அக்காவை,
தேடிக் கொண்டிருக்கிறேன்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications