கூனற் கிழவனும், தேவதைகளின் பெருநாளும்- ஈழநாதன்
வராமல்
எங்கே போய்விடும்
வருடத்தின் பெருநாட்கள்?
நேற்றும்
இன்றும்
வந்ததைப் போலவே
இனி,
நாளையும்
வரத்தான் செய்யும்.
கூன் விழுந்த
கிழவனின்
பிடிசாபத்துக்கும்
முகஞ்சுழிப்புக்கும்
அஞ்சாத தேவதைகள்,
பெருநாட்களை
மீண்டும் அழைத்துவரும்.
காலைச் சாப்பாட்டிற்காய்
கடை வாசலில் நிற்கும்
கிழவன் பற்றி
அவைகளுக்கென்ன கவலை?
பல்லிடுக்கில்
ஒட்டவும் காணா
பருக்கைச் சோற்றுடன்
முந்தைய நாளையும்
அதுவுமில்லா
நேற்றையும்
கழித்துவிட்ட கிழவனுக்கு,
பெருநாளுக்காய்ப் பூட்டிய
கடைகளுக்கும்
பிச்சையிடாப்
பெருமக்களுக்கும்
சேர்த்து வைத்து,
இன்றையச் சோற்றுக்கு
உலை வைத்த
பெருநாளையும்
தேவதைகளையும்
திட்டத்தான் முடியும்.
தேவதைகள் என்ன செய்யும்
எல்லோரும்
இன்புற்றிருக்கவன்றி
ஏதுமறியாத் தேவதைகள்
பெருநாட்களை
மீண்டும் அழைத்து வரும்,
நேற்றைப் போல்
இன்றும்
பசித்திருக்கும்
கிழவனுக்குப் பயந்து
வராமல் போய்விடுமா
வருடத்தின் பெருநாட்கள்.
- ஈழநாதன் ([email protected])
இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications