கொடுத்து வைத்தவள்- ஈழநாதன்
Subscribe to Oneindia Tamil
பாட்டி செத்துப்போய்
பன்னிரண்டு மணிகழித்து,
பூட்டிய வீடுடைத்துப்
பார்த்தார்கள் பிணத்தை.
வெள்ளாடையும்
நரைதலையும்
வெள்ளிக்கிழமை விபூதியுமாய்
செத்துப் போய்விட்டிருந்தாள்
பாட்டி.
வெளிநாட்டு மகன்களுக்கு
தொலைபேசி வந்தவர்கள்
இரவற் கொள்ளிக்கு
ஆளைத் தேடினர்.
வெளிநாட்டுக் காசு
உள்ளூர் ஆட்கள்
அலங்கார மாலைகள்
அதிரும் பறையுடன்,
மயானம் போனாள்
பாட்டி
கொடுத்து வைத்த கிழவி
சாவில் கூட
ராசமரியாதை
பொருமிக் கொண்டது
ஊர்
பாட்டி
அடிக்கடி படிக்கும்
பகவத் கீதைக்குள்
தன் சாவுக்காவது
மகன்களை
வரும்படி எழுதி
மடித்து வைத்த கடிதத்தை,
கடைசி வரை
யாரும்
படிக்கவேயில்லை;
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications