திருவிழாவில் தொலைந்த தேவதை
சண்டையிட்ட தலைவர்கள் கூடி
சமாதானத் தேவதைக்கு
திருவிழா நடத்தினர்.
ஆண்டாண்டு காலமாய்
அடைத்துக் கிடந்த
கர்ப்பக் கிரகத்தின்
கனகமணிக் கதவங்கள்
அகலத் திறந்தன.
இரத்த வெடிலடிக்கும்
சுவர்களும் கூரையும்
சுரண்டப்பட்டு
வெள்ளையேறின.
நிணம் வடிந்த
தூண்டாமணி விளக்கு
புளி போட்டு விளக்கி
பளபளத்தது.
அகிற்புகை
சாம்பிராணிப்புகையால்
மூலையில் ஒளிந்தது
கந்தக வாசம்.
தங்களால் வெட்டப்பட்ட
தலைகளை மறைப்பதில்,
தலைவரும் தொண்டரும்
போட்டி போட்டனர்.
வெளவால் தூங்கிய
கர்ப்பக் கிரகம்
வெள்ளைக்கொடிகளால்
அலங்காரம் பெற்றது.
வெட்டித் தொங்கிய
சிறகுகள் ஒட்டி,
சீர் செய்யப்பட்டது
சமாதானப் புறா.
"இதுவரை காலமும்
தடைப்பட்ட சமாதானம்
எங்களால் தான்
உயிர்பெற்றெழுந்தது"
எதிர்ப்பக்கத் தலைவரின்
பேச்சுக்கு எதிர்ப்பாய்
மறுப்புரை வந்தது
மறுபக்கமிருந்து.
இடையிடை சண்டையில்
அகப்பட்டிறந்த
மக்களுக்காகவும்,
மாறி மாறி
குற்றஞ் சாட்டினர்.
தலைவர்களின் பேச்சுக்கு
தொண்டர்கள் கொந்தளிக்க
மீண்டும் அரங்கேறியது
கலம்பகம்
சண்டையின் முடிவில்
சிறகுகள் பிய்ந்து
சிதைந்து கிடந்தது
சமாதானப்புறா!
கலம்பகம் முடிந்து
கணக்கிட்ட போது
தொலைந்து போயிருந்தாள்
சமாதானத் தேவதை!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications