அழுகிறபோது எழுதமுடியுமா?
அழுகிறபோது எழுதமுடியுமா?
அழுத கண்ணீர்
அழிக்கிறது எழுத்தை!
எழுவது எப்போது?
ஏங்கித் தவிக்கையில்
எழுதுவதென்பது
இப்போதைக்கில்லை
அழுவது மட்டுமே
ஆறுதலானது
அழுவதொன்றே
அனைவர்க்குமானது
கடற்கரை எல்லாம்
மயான மேடை
காற்றில் எல்லாம்
பிணங்களின் வாடை
கண்ணீரில் மிதக்கும்
மக்களின் கோலம்
காதுகள் கிழிக்கும்
உயிர்களின் ஓலம்
இதுதான் அங்கே
நிலவும் அவலம்
உறவுகள் இழந்து
உணர்வுகள் முறிந்து
கண்ணீர் வற்றி
காயும் வயிறுடன்
வாடும் உயிர்கள்
தேடுவது கவிதையா?
கவிதையா இப்போது
கைகொடுக்கும்?
இல்லை இல்லை
இல்லவே இல்லை
இதயம் வெடிக்கும்
இந்தத் துயரில்
வாடும் மக்களுக்கு
வாரி வழங்குவோம்
இருப்பதைக் கொடுத்து
இதயத்தைக் காட்டுவோம்
இடிந்தவர் இதயம்
இயங்க உதவுவோம்
மடிந்தவர் மண்ணில்
மறுவாழ்வு நாட்டுவோம்
தீராக் கடல்பசி
தீர்ந்ததா? இல்லையா?
தெரிந்துகொள்ளாமல்
எப்படி எழுதுவது?
கோர உயிர்ப்பலி
முடிந்ததா? இல்லையா?
முடிவு செய்யாமல்
எழுதுவது எப்படி?
துயரத்தின் ஈரம்
உலர்ந்ததா? இல்லையா?
உலராமல் எப்படி
உணர்த்துவது கவிதையில்?
எழுவது எப்போது?
ஏங்கித் தவிக்கையில்
வாழ்வது இயலுமா?
வாடி உதிர்கையில்
எழுதுவதென்பது
இப்போதைக்கில்லை
அழுகிறபோது எழுதமுடியுமா?
அழுத கண்ணீரே
அழிக்கிறது கவிதையை.....
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications