நீள்கிறது கவலை
மதமும்
மதத்தால் வரும் மதமும்
இல்லாத என்
எதிர்காலத் தோழன்
என்னபாடு படுவான்!
"எங்கும் இருக்கிறான்
இறைவன்
எல்லாமாகவும் இருக்கிறான்
இறைவன்" - விடு என்னை
என்பவனை
என்னபாடு படுத்தும்
இந்த உலகம்!
இறைவன் இருக்கிறான்
என்பதை விடவும்
அவன்
எப்படி இருக்கிறான்
என்பதே முக்கியம்
எப்படி இருக்கிறான்
என்பதை விடவும்
அவன்
எந்த மதத்தினன் என்பது
இன்னும் முக்கியம்
"மதமில்லாத இறைவனா"
உன்னை மன்னிக்க மாட்டோம்
இறைவனில்லாத
மதமிருக்க முடியும்
மதமில்லாத
இறைவனிருக்க முடியாது
மதமில்லாத ஓர்
இறைவனை நம்பும்
உன்னை விடவும்
இறைவனே இல்லை என்பவன்
தெளிவானவன்
"ஒன்று
இறைவனை இல்லையென்று சொல்
அல்லது
அவன்
எந்த மத்தினன் என்று சொல்"
மதமில்லாத இறைவன்
எனச் சொல்லும் உன்னையும்
மதமில்லாத இறைவனையும்
மன்னிக்க மாட்டோம்.
மதமில்லாத மனிதனுக்கு
எதிர்காலம் உண்டா?
மதமில்லாததோர்
எதிர்காலம்தான் உண்டா?
பிச்சினிக்காடு இளங்கோ
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications