மரபு மீறிய மனங்கள்

Subscribe to Oneindia Tamil

துறவியர் இழிந்த
தவறினை செய்யத்
துணிந்திடல் முறையா?

இல்லறப் பற்றை
இழந்திடும் மரபினை
இடித்திடல் தகுமா?

சொல்ல நா கூசும்
துர்நாற்றச் செயல்களை
புரிந்தது நெறியா?

அல்லும் பகலும் - வாய்
அலுக்கப் பேசி
அங்கலாய்க்கின்றோம்!!

எந்த விலங்கும் - தன்
இனத்தில் ஒன்றை
வணங்குவதுண்டா?

இந்தத்
தலைமுறை மரபினைத்
தரைமட்டமாக்கி..
சக மனிதனை
சாமியென்றுப் போற்றியதால்..!

மரபு மீறியது சாமியார்களல்ல..!
மனங்களுள்ள
மனிதர்கள் நாம்தான்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+