பகல் பொழுது- ஷைலஜா
Subscribe to Oneindia Tamil
பட்டப் பகல்
பக்கத்திலெல்லாம்
பலப் பல ஓசைகள்
வாகன இரைச்சல்
காய்கறிக்காரனின்
தக்காளி கிலோ ஏழுரூபாய்
காகம் ஒன்றின்
ஓயாக் கரையல்
சக நாய் கண்டு
தெரு நாய் குறைக்கும்
யார் வீட்டுத் தொலைக்காட்சியிலோ
மெகா சீரியலில்
மாமியாருக்கும்
மருமகளுக்கும்
வாக்குவாதம்
சின்ராசுக்கடையில்
கல்லாப்பெட்டியில்
காசுபோடும் சத்தம்
செந்தில் சைக்கிள் கடையில்
வை ராஜா வை
பாட்டும் ஆட்டமும்
உச்சிகாலபூஜைக்கு
கோயிலுக்கு விரையும்
கோமளா மாமியின்
மெட்டிஒலி ஓசை
செருப்பு சத்ததிற்கு
முன்னேயே வரவை
கட்டியம் கூறும்
வாய்க்கால் படித்துறையில்
கல்லின்மீது விழுந்து எழும்
துணி(க்)கரமான படீர்படீர்
எதிர்வீட்டுத்தாத்தாவின்
தூக்கிவாரிப்போடும்
ஒற்றைத் தும்மல்
இத்தனை அமளிக்கு நடுவே...
வெய்யிலிடைத் தீவாய்
விண் நோக்கித்
தியானிக்கும்
மரங்கள் மட்டும்
தங்கள் நிழலை
பூமியின்மீது
மெளனமாய் பரப்பும்
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications