பாரதிதாசன்- சுப.வீரபாண்டியன்
Subscribe to Oneindia Tamil
பாட்டுக்கு உரை எழுதிப்பார்த்ததுண்டு
நீயோ பெரியாரின் உரைகளுக்குப்
பாட்டெடுத்த பாவின் வேந்தன்!
பாட நூல்களில் நீ வெறும் "குடும்ப விளக்கு
தேர்வுகள் முடிந்து தெருவுக்கு வந்தபின்
உணர்ந்தேன் உன்னை
"தமிழச்சியின் கத்தியாய்!
புரட்சிக் கவிஞனே,
உன் "அழகின் சிரிப்பை
பத்திரப்படுத்தினோம்
கொடியோர் செயல் அழித்திட
நீகொடுத்த கொலைவாளை மட்டும்
எங்கோ தொலைத்துவிட்டோம்!












Click it and Unblock the Notifications