முதல் வீடு- நெல்லை சுதன்
முதல் வீடு
முன்னூறு நாட்கள்
முகம் கவிழ்ந்து
மோனத் தவமிருந்த வீடு
இரு உள்ளங்களின்
இன்ப கணங்களின்
இளஞாயிறாய் - எனை
இனம் காட்டிய வீடு
பன்னீர் குடத்தினுள்
பாவமறியாப் பருவமாய் எனை
பக்குவப் படுத்திய
பாசத்தின் கோயில்
ஊனை உயிராக்கி
உயிரை உணவாக்கி
என் உயிர்த்துடிப்பை
பதிவு செய்த வீடு
அன்பின் கூடாம்
அருள் வீட்டை விட்டு
அடியெடுத்து வைத்தேன்
அகிலத்தின் அதிசயம் காண!
என் சொல்வேன்
இங்கு இழிநிலையை
இதயம் கசந்திடும்
இருட்டு வாழ்க்கை
கொலை கொள்ளையின்
கூட்டுறவு விழா
பொதுநலப் போர்வையில்
சுயநலப் பேய்கள்
அரசியலின் அவலங்கள்
ஆன்மீகத்தில் அசிங்கங்கள்
பதவியில் பாவங்கள்
பாமரனின் பரிதாபங்கள்
நம்பி வந்த எனக்கு
நச்சுக் காற்றால்
மூச்சுத் திணருகிறது
ஓடுகிறேன் கல்லறையை நோக்கி
மீண்டும் பிறப்பேன் - அந்த
வசந்த வாசத்திற்காக
என் முதல் வீட்டின்
இனிய சுவாசத்திற்காக
ஆம்
என் தாயின்
கருவறை சுகத்திற்காக !
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications