அடங்காத கண்ணீர்!
சென்ற திசையெல்லாம்
கொத்தெலும்பையும்,
கோவணத்தையும் தவிர வேறென்ன
நான் பார்த்தேன்;
கலப்பையையும்,
கஞ்சிக்கலயத்தையும்
தூக்கிக்கொண்டு,
தேடிக்கொண்டிருக்கிறான் - அங்கே
வாழ்க்கையை;
கைக்குட்டையையும்,
கண்மையுடனும் வந்து
கருத்துக்கூறிக்கொண்டிருக்கிறது
ஒரு கூட்டம்
மனித உரிமையைப்பற்றி!
அவமானங்கள் ஆயிரமாயிரம்,
அசிங்கத்தின் சின்னங்கள் - அங்கே
சிம்மாசனத்தில்,
அவதானித்து செல்கிறேன் - நான்
அஹிம்சைவாதி!
வாயடைத்துதான் நிற்கவேண்டும்,
வாய்ப்பு கிடைக்கும் வரை;
வயதாகிக்கொண்டிருக்கிறது என்
கனவுகளுக்கு,
கற்சிலை அமைக்க துடிக்கிறேன்,
கல்லறை வடிவில் அல்ல!
காரியம் நிச்சயம் கைகூடும் - நான்
சாமியாரைக் கேட்கவில்லை!
![]() ஆயிரம் சாமியார்கள் உண்டு - நாட்டில் அமைதி எங்கும் இல்லை! ஆயிரம் கோயில்கள் உண்டு - நாட்டில் சாமிக்குப் பஞ்சமில்லை; எரிகிறது, மனிதனை மனிதனே கொல்கிறானாம்?! வருத்தத்துடன், - இரா.தமிழரசன்([email protected]) படைப்புகளை அனுப்ப: கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். |
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications