சொல்லி விடு- எஸ்.தியாகராஜன்
Subscribe to Oneindia Tamil
பிறப்புதொட்டு இல்லா ஓர் மாற்றம்,
என்னுள்ளே! எனக்குள்ளே!!!!
யாரோ உனையழைக்க, நான்
திரும்பிப் பார்க்கிறேன்.
ஏனோ உன் பெயர் சேர்த்து
எனை அழைக்க விழைகிறேன்.
உன் மின்னஞ்சல் வந்தால்
மின்சாரத் தாக்கம்
வாராது போனால்
கவலைகள் தேக்கம்.
பிறப்புதொட்டு இல்லா ஓர் மாற்றம்,
என்னுள்ளே! எனக்குள்ளே!!
கனவில் அழகாய் தெரிய
நடுநிசியில் முகச்சவரம் செய்கிறேன்.
கனவில் நீ கோதிய தலைமுடியை
பகல் முழுதும் தடவுகிறேன்.
ஏனடி பெண்ணே! எதற்க்காய் இப்படி!
இதுவரை இருந்ததில்லை, இப்படி நான்.
காதலென்கிறது இதயம்,
நட்பின் புதிய பரிணாமமென்கிறது அறிவு
காதலா? நட்பின் பரிணாமமா?
எதுவென்றாலும் எனக்கு சம்மதமே!
உனக்குள்ளும் இவையெல்லாம்
நிகழ்கிறதா?
சொல்லடி பெண்ணே!
இருந்தால்,
உன்னில் நான் இருந்தால்
சொல்லிவிடு!
என்னையும் கொஞ்சம் வாழ விடு.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications