எம்தமிழ் செம்மொழி!
எம்மொழியைச்
செம்மொழியாய் அறிவித்தீர்
எங்கள் செவிகளிலே
தேன் அள்ளித் தெளித்தீர்!
எத்திசையும் புகழ் மணக்கும்
எம் தமிழை ஏற்றி வைத்தீர்
அரியணையில்
வாழ்க! வாழ்க!
கம்பநாட்டுக் கவியே!
எங்கள் பொதுமறையின் புலவா !
துறவு கொண்டு - தமிழுக்கு
வரவு தந்த இளங்கோவா !
பாட்டுக்கொரு புலவா !
புரட்சியைப் பாடி வைத்த தலைவா !
கண்ணனுக்குத் தாசனே!
உங்கள் கனவுகள்
இன்று உயிர் பெற்றது பாரீர்!
நீங்கள் படைத்த தமிழை
நாங்கள் படித்தோம்!
நீங்கள் கொடுத்த தமிழை
நாங்கள் குடித்தோம்!
செம்மொழி அறிவிப்பால்
துள்ளிக் குதித்தோம்!
சீரிளமைத் திறம் நிறைந்த செந்தமிழை
செம்மொழியே என்றீர்கள்
வாழ்க! வாழ்க!
இனிப்
பல்கலைக் கழகமெல்லாம்
பைந்தமிழை அலங்கரிக்கும்!
பன்னாட்டு உறவுகளில் எங்கள்
தமிழ் மொழியே மணக்கும்!
பாரெல்லாம் பைந்தமிழை
வரவேற்கும்!
பைந்தமிழ்த் தாயை
உலகமெலாம் வணங்கும்!
நீரெல்லாம் நிலமெல்லாம்
ஆர்ப்பரிக்கும்
நீண்ட வரலாறு
தமிழ் மொழியை தரிக்கும்!
கீழ்த்திசை மொழிகளிலே
கீர்த்தி பெற்ற மொழியாகும்!
கிழக்குச் சூரியனாய்த்
தமிழ் என்றும் வாழும்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications