உன்வசமும் மின்மினிகள்!
Subscribe to Oneindia Tamil
மானுடமே இனியேனும் மாற்றம் கண்டுமறுமலர்ச்சி யுகந்தன்னில் வாழ்ந்து காட்டு! ஊனுடலை வளர்த்திங்கே உயிரும் வாழ்ந்தாய்; உதவாத செயலனைத்தும் ஒருங்கே செய்தாய்! பேணுகின்ற நற்பழக்கம் யாவும் தள்ளி பித்தனென பேதையென வாழ்வமைத்தாய்! நாணுகின்ற செயல்களெல்லாம் நன்றே செய்து நடைபிணமாப் பூமிக்கும் பாரமானாய்! குடியழிக்கும் பழங்கங்கள் கூடி நிற்கும் குறையுடயை பிறவியென வாழ்வமைத்து; அடிதடிக்கும் கொலைகளுக்கும் ஆளாய் போனாய் அவனியிலேயே நீயுமொறு மிருகமாகி! படியளக்கும் இறைவனுக்கும் பாவம் செய்தாய் பக்தனென வேடமிட்ட நடிப்பின் மூலம்! விடியலுமே உன்வாழ்வில் வந்ததுண்டா? விழித்திடுவாய் இனியேனும் விடியல் காண! மதம்பார்த்தாய்; இனம்பார்த்தாய்; எல்லாம் பார்த்தாய் மற்றவரை மனிதரெனப் பார்த்ததுண்டா? பதம்பார்க்கும் ஆயுதத்தைக் கையில் கொண்டால் பாசமெங்கே உன்னிடத்தில் உறவா கொள்ளும்! இதம்பார்த்துப் பேசுகின்ற இயல்பு விட்டால் இதயத்தில் ஈரமெங்கே இடம்பிடிக்கும்? மிதமிஞ்சிப் போகவில்லை இன்னும்;- உன்னில் மின்னுகின்ற மின்மினிகள் மிச்சம் உண்டே! - ரா.விமலன்([email protected]) படைப்புகளை அனுப்ப: கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். |
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக
மானுடமே இனியேனும் மாற்றம் கண்டு











Click it and Unblock the Notifications