வா மழையே.. மீண்டும் மீண்டும் தா!

விடாது பெய்யும் மழை
சில்லென்ற காற்று
படுக்கையை விட்டு எழவே மனசு வராமல்
போர்வைக்குள் புகுந்து புதைந்த நாட்கள் அழகானவை.
மழையை ரசித்துக் கொண்டே சூடாக ஒரு காபி அருந்தினோம்.
தாயின் சேலைக்குள் மழைக்காக குழந்தை புகுவதே கொள்ளை அழகு
மழையில் பள்ளிக்குச் செல்ல அடம்பிடிக்கும் குழந்தையின் அழகை
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
சின்னஞ்சிறு துளிகளை கையில் பிடித்து விளையாடலாம்
மழை பெய்தவுடன் இன்று நமக்கு விடுமுறை இருக்கிறதா என தொலைக்காட்சி செய்தியில் தேடினோம்.
நமக்கு விடுமுறை இல்லையென்றால் விடுமுறை அறிவித்த மாவட்டங்களின் மக்களை ஏக்கத்தோடு பார்த்திருக்கிறோம்.
மழையில் கப்பல் விட்டால் அதன் சந்தோசமே தனி தான்
மழையில் நண்பர்களுடன் விளையாடி உடல் முழுவதும் சேறும் சகதியுமாய் அம்மாவிடம் திட்டு வாங்கலாம்.
மழையில் நனைந்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டு அடி வாங்கலாம்
காரிலோ பேருந்திலோ செல்லும் போது தலையை நீட்டி முகத்தில் தூறல் பட மழையை அனுபவிக்கலாம்
வீட்டின் ஜன்னல் கம்பிகளின் இடையே உள்ள மழைத்துளிகளை சேகரித்தது நினைவில் இருக்கிறதா
மழை நேரத்தில் பேருந்துக்காக காத்திருந்த தருணம்
அடடா எவ்வளவு சுகம் தெரியுமா இந்த மழை
மழை பெய்யும் போது அதன் கட்டிகளை எடுத்து ஒருவர் மீது ஒருவர் அடித்து விளையாடியது.. ஞாபகம் வருதே!
மழையில் சிலருக்கு சூடாக பஜ்ஜி சாப்பிட பிடிக்கும்.
சிலருக்கு மழை வந்தாலே ரொம்பப் பிடிக்கும்
வா மழையே..
இளம் பிராயத்து சுகத்தை மீண்டும் மீண்டும் தா!
- ஜி. உமா
-
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications