தேன் நிலவைக் காணவில்லை #ValentinesDay
சென்னை: காதல் என்றாலே வெற்றியும் தோல்வியும் சகஜம்தான். மனங்களின் கலப்பு பலருக்கு சரியாக அமையும். சிலருக்கு தோல்வியில் முடியும். எதுவாக இருந்தாலும் மனதார ஏற்பதே காதலுக்கு அழகு. கைவசப்படாமல் போவதால் அது காதல் இல்லை என்றாகி விடாது. காதல் கொண்ட மனது கடைசி வரை அந்த காதலை விட்டு அகலாமல்தான் இருக்கும், இருக்க வேண்டும். காதலைக் கொண்டாட வெற்றி மட்டும் தேவையில்லை, தோல்வியிலும் கூட காதலைக் கொண்டாட வேண்டும். காரணம், தோற்பது காதலர்களாக இருக்குமே தவிர.. காதல் என்றுமே தோற்பதில்லை.

நமது மதுரை வாசகர் இராம. சக்திவேல் எழுதிய ஒரு கவிதை.
என் உயிர் காதலியே...
நின் மதி காணாமல்
நிம்மதி என்னுள் இல்லாமல்..
என் மதி கலஙகுதல்
நின் மதி அறியுமோ...
நின் இன்முகம் வேண்டி இனியும் உலவும் என் இன்முகம் உனக்கின்றி வேறு எவர்க்கு?
தேன் நிலவைக் காணவில்லை
தேய்ந்தெங்கோ மறைந்ததம்மா...
தேய்கின்ற நிலவு தான் என்றும்
முழு நிலவாய் வளர்ந்து வரும்..
வான் கூடிப் பிரிகின்ற மேகம்
மீண்டும் எழில் வண்ணக் கோலமிடும்..
இதயத்தில் கலந்த நின் நினைவு என்றும் என் உதிரத்தில் கலந்திருக்கும்...
கண்ணெதிரே மறைந்தாலும்..
மனதோடு பரிமாறும் நின் எண்ணங்கள்..
மரித்தாலும் மாறாத உயிர் வண்ணங்கள்....
இராம .சக்திவேல்
மதுரை
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications