80 பிளஸ் ஏஐ டூல்ஸ்.. நீங்கள் ஒரு மாதத்தில் செய்யும் வேலைகளை.. சில நிமிடங்களில் செய்யும்
சென்னை: இன்றைய காலகட்டத்தில், "கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக உழைப்பதே சிறந்தது" என்பதை பலரும் ஏற்பார்கள். அதற்கு நமக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வரப்பிரசாதம்தான் செயற்கை நுண்ணறிவு அல்லது ஏஐ தொழில்நுட்பம். நீங்கள் ஒரு மாதத்தில் செய்யும் வேலை சில நிமிடங்களில் இந்த ஏஐ செய்து முடித்துவிடும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. உண்மை தான். ஆராய்ச்சி முதல் கட்டுரைகள் உருவாக்க, அழகான புகைப்படம் உருவாக்க, வெப்சைட் உருவாக்க, வீடியோக்களை உருவாக்க, ஆன்லைன் மீட்டிங் கவனிக்க, கோடிங்க எழுத, கூகுளில் உங்கள் கட்டுரை முதலில் வர என எல்லாவற்றுக்கும் ஏஐ உதவுகிறது.
நீங்கள் ஆபீஸ் வேலை பார்ப்பவராக இருக்கலாம், சொந்தமாகத் தொழில் செய்பவராக இருக்கலாம், அல்லது மாணவராக இருக்கலாம்... உங்களின் பல மாத உழைப்பை, வெறும் சில நிமிடங்களில் முடித்துத் தரும் ஆற்றல் இந்த 80-க்கும் மேற்பட்ட ஏஐ டூல்களுக்கு உண்டு. சாமானிய மக்களும் எளிதாகப் புரிந்துகொண்டு, தங்களுக்குத் தேவையான டூலைத் தேர்ந்தெடுக்கும் வகையில், அதன் முழுப் பட்டியல் இதோ தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பார்ப்போம். பலரும் ஆங்கிலத்தில் தான் தேடுவார்கள் என்பதால், அந்த வார்த்தைகள் அப்படியே ஆங்கிலத்திலும் இருக்கும். ராஜேஸ் அகர்வால் என்பவர் வெளியிட்ட பதிவினை பார்ப்போம்.

1. ஆராய்ச்சி செய்ய (Research)
ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி ஆழமாகத் தேட, படிக்க அல்லது புதிய யோசனைகளைப் பெற இவை உதவும்.
சாட்ஜிபிடி (ChatGPT)
கோபைலட் (Copilot)
ஜெமினி (Gemini)
அபாகஸ் (Abacus)
பர்ப்ளெக்ஸிட்டி (Perplexity)
2. அழகான புகைப்படங்களை உருவாக்க (Image)
வார்த்தைகளால் நீங்கள் நினைப்பதைச் சொன்னால், அதை அப்படியே அழகிய ஓவியமாகவோ அல்லது நிஜப் புகைப் படமாகவோ மாற்றித் தரும்.
ஃபோட்டோர் (Fotor)
டால்-இ 3 (Dalle 3)
ஸ்டெபிலிட்டி ஏஐ (Stability AI)
மிட்ஜர்னி (Midjourney)
மைக்ரோசாப்ட் டிசைனர் (Microsoft Designer)
3. விளம்பர வாசகங்கள் எழுத (CopyWriting)
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் அல்லது கூகுள் விளம்பரங்களுக்கு மக்களைக் கவரும் வகையில் கேப்ஷன்கள் மற்றும் வாசகங்கள் எழுத இவை பயன்படும்.
ரைட்டர் (Rytr)
காப்பி ஏஐ (Copy AI)
ரைட்சோனிக் (Writesonic)
ஆட்கிரியேட்டிவ் ஏஐ (Adcreative AI)
4. கட்டுரைகள் மற்றும் கதைகள் எழுத (Writing)
கடிதங்கள், கட்டுரைகள், மின்னஞ்சல்கள் (Emails) போன்றவற்றை இலக்கணப் பிழையின்றி, மிக நேர்த்தியாக எழுத இவை உதவும்.
ஜாஸ்பர் (Jasper)
ஹிக்ஸ் ஏஐ (HIX AI)
ஜென்னி ஏஐ (Jenny AI)
டெக்ஸ்ட் பிளேஸ் (Textblaze)
குவில்பாட் (Quillbot)
5. இணையதளம் உருவாக்க (Website)
கோடிங் (Coding) எதுவும் தெரியாமல், வெறும் சில நிமிடங்களில் உங்களுக்கான சொந்த இணையதளத்தை உருவாக்கலாம்.
10வெப் (10Web)
டியூரபிள் (Durable)
பிரேமர் (Framer)
ஸ்டைல் ஏஐ (Style AI)
6. வீடியோக்கள் எடிட் செய்ய (Video)
நீளமான வீடியோக்களைச் சுருக்க, சினிமாத்தரமான வீடியோக்களை உருவாக்க அல்லது யூடியூப் ஷார்ட்ஸ் மற்றும் ரீல்ஸ் செய்ய இவை உதவும்.
கிளாப் (Klap)
ஓபஸ் (Opus)
எய்ட்டிஃபை (Eightify)
இன்வீடியோ (InVideo)
ஹேஜென் (HeyGen)
ரன்வே (Runway)
இமேஜ்கிரியேட்டர் ஏஐ (ImgCreator AI)
மார்ப்ஸ்டுடியோ (Morphstudio .xyz)
7. ஆன்லைன் மீட்டிங்குகளைக் கவனிக்க (Meeting)
நீங்கள் மீட்டிங்கில் இருக்கும்போது, முக்கியமான பாயிண்டுகளை இதுவே குறிப்பு (Notes) எடுத்துத் தந்துவிடும்.
டிஎல்டிவி (Tldv)
ஆட்டர் (Otter)
நோட்டி ஏஐ (Noty AI)
ஃபயர்ஃபிளைஸ் (Fireflies)
8. கூகுளில் உங்கள் கட்டுரை முதலில் வர (SEO)
நீங்கள் எழுதும் கட்டுரைகள் கூகுள் தேடலில் அல்லது யூடியூபில் முதல் பக்கத்தில் வருவதற்கு எந்த மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று இது சொல்லும்.
விட்ஐக்யூ (VidIQ)
சியோனா ஏஐ (Seona AI)
ப்ளாக்எஸ்சிஓ (BlogSEO)
கீவேர்ட்ஸ் ஏஐ (Keywrds ai)
9. வாடிக்கையாளர்களுடன் பேச (Chatbot)
உங்களுடைய இணையதளத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு 24 மணி நேரமும் தானாகவே பதில் அளிக்கும் ரோபோக்கள்.
டிராக்சி (Droxy)
சாட்பேஸ் (Chatbase)
மியூச்சுவல் இன்ஃபோ (Mutual info)
சாட்சிம்பிள் (Chatsimple)
10. பிரசென்டேஷன் / ஸ்லைடுகள் தயார் செய்ய (Presentation)
ஆபீஸ் அல்லது கல்லூரிகளில் ப்ராஜெக்ட் சமர்ப்பிக்கத் தேவையான ஸ்லைடுகளை அசத்தலாக வடிவமைக்கலாம்.
டெக்டோபஸ் (Decktopus)
ஸ்லைட்ஸ் ஏஐ (Slides AI)
காமா ஏஐ (Gamma AI)
டிசைன்ஸ் ஏஐ (Designs AI)
பியூட்டிஃபுல் ஏஐ (Beautiful AI)
11. வேலைகளைத் தானியங்கி முறையாக்க (Automation)
ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யாமல், கம்ப்யூட்டரே எல்லாவற்றையும் தானாகச் செய்யும்படி (Automation) செட் செய்யலாம்.
மேக் (Make)
ஜேப்பியர் (Zapier)
ஜெம்ப்ளி (Xembly)
பார்டீன் (Bardeen)
12. ஏஐ-யிடம் வேலை வாங்க (Prompts)
ஏஐ டூல்களிடம் எப்படிப் பேசினால் சரியான பதில் கிடைக்கும் என்பதற்கான ஐடியாக்களைத் தரும் தளங்கள்.
ஃப்ளோஜிபிடி (FlowGPT)
அலிசென்ட் ஏஐ (Alicent AI)
ப்ராம்ப்ட்பாக்ஸ் (PromptBox)
ப்ராம்ப்ட்பேஸ் (Promptbase)
ஸ்நாக் ப்ராம்ப்ட் (Snack Prompt)
13. மொபைல் ஆப் மற்றும் இணையதள வடிவமைப்பு (UI/UX)
ஆப் அல்லது வெப்சைட் பார்ப்பதற்கு எப்படி இருக்க வேண்டும் என்ற லே-அவுட்டை (Layout) உருவாக்கப் பயன்படுபவை.
ஃபிக்மா (Figma)
யுஐசார்ட் (Uizard)
யுஐமேஜிக் (UiMagic)
போட்டோஷாப் (Photoshop)
14. பொதுவான டிசைனிங் வேலைகளுக்கு (Design)
போஸ்டர்கள், பேனர்கள், இன்ஸ்டாகிராம் போஸ்ட்கள் போன்றவற்றை எளிதாக டிசைன் செய்ய.
கேன்வா (Canva)
ஃப்ளையர் ஏஐ (Flair AI)
டிசைனிஃபை (Designify)
கிளிப் டிராப் (Clipdrop)
ஆட்டோட்ரா (Autodraw)
மேஜிஷியன் டிசைன் (Magician design)
15. லோகோ உருவாக்க (Logo Generator)
உங்கள் புதிய நிறுவனத்திற்கு சில நொடிக்ளிலேயே பிராண்டட் லோகோக்களை (Logo) டிசைன் செய்து தரும்.
லூக்கா (Looka)
டிசைன்ஸ் ஏஐ (Designs AI)
பிராண்ட்மார்க் (Brandmark)
ஸ்டாக்இமேஜ் ஏஐ (Stockimg AI)
நேம்சீப் (Namecheap)
16. ஆடியோ மற்றும் குரல் மாற்றம் (Audio)
எழுத்துக்களைக் கொடுத்தால் அதை நிஜ மனிதக் குரலாக மாற்றுவதற்கும், பின்னணி இரைச்சலை (Noise) நீக்குவதற்கும் உதவும்.
லோவோ ஏஐ (Lovo ai)
இலெவன் லேப்ஸ் (Eleven labs)
சாங்பர்ஸ்ட் ஏஐ (Songburst AI)
அடோபி பாட்காஸ்ட் (Adobe Podcast)
17. வேலைத்திறனை அதிகரிக்க (Productivity)
கம்ப்யூட்டரில் நாம் செய்யும் அன்றாட வேலைகளை வேகப்படுத்தி, நேரத்தை மிச்சப்படுத்தும் சூப்பர் டூல்கள்.
மெர்லின் (Merlin)
டைனிவாவ் (Tinywow)
நோஷன் ஏஐ (Notion AI)
அடோபி சென்செய் (Adobe Sensei)
பெர்சனல் ஏஐ (Personal AI)
18. சமூக ஊடகங்களை நிர்வகிக்க (Social media management)
எக்ஸ் (ட்விட்டர்), லிங்க்டுஇன் போன்ற பக்கங்களில் தினமும் என்ன போஸ்ட் போட வேண்டும், எப்போது போட வேண்டும் என்பதைத் திட்டமிட உதவும்.
டபிலோ (Tapilo)
டைப்ஃபுல்லி (Typefully)
ஹைப்ஃப்யூரி (Hypefury)
ட்வீட்ஹண்டர் (TweetHunter)
தொழில்நுட்பம் நமக்கு வேலைகளை எளிதாக்கிக் கொடுத்துவிட்டது. இந்த 80 டூல்களில் உங்கள் வேலைக்குத் தகுந்த சில டூல்களை நீங்கள் கற்றுக் கொண்டாலே, பல மணி நேர வேலைகளை சில நிமிடங்களில் முடித்துவிட்டு, உங்களின் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தலாம்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா














Click it and Unblock the Notifications