Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"எனது வேலையை கூட AI பறித்துவிடும்! ஆனால்.." எச்சரிக்கை மணியை அடித்த சாட்ஜிபிடி நிறுவனர்

Subscribe to Oneindia Tamil

சியாட்டில்: ஏஐ காரணமாக மிகப் பெரிய வேலையிழப்பு ஏற்படும் எனப் பல்வேறு தரப்பினரும் அச்சம் தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே ஏஐ காரணமாகத் தனது வேலையே கூடப் போக வாய்ப்பிருப்பதாகச் சொல்லி அதிர்ச்சி கொடுத்துள்ளார் சாட்ஜிபிடியை உருவாக்கிய சாம் ஆல்ட்மேன். இது தொடர்பாக அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

கடந்த சில ஆண்டுகளாகவே ஏஐ படுவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. திரும்பிய பக்கமெல்லாம், எல்லாத் துறைகளிலும் ஏஐ ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதேநேரம் இந்தச் செயற்கை நுண்ணறிவால் வேலையிழப்பு ஏற்படும் ஆபத்தும் இருப்பதாகப் பல்வேறு தரப்பினரும் எச்சரித்து வருகிறார்கள்.

AI Could Soon Replace Me as OpenAI CEO and I ll go to my farm When It Happens says Sam Altman

சாம் ஆல்ட்மேன்

இதற்கிடையே ஓபன்ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் கூறியுள்ள சில கருத்துகள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதாவது வரும் காலத்தில் தனது வேலையைக் கூட செயற்கை நுண்ணறிவு எடுத்துக்கொள்ளும் என்றும் அதற்குத் தயாராகி வருவதாகவும் கூறியுள்ளார். கான்வர்சேஷன்ஸ் வித் டைலர் என்ற பாட்காஸ்டில் பேசிய அவர் இது குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்தார்.

சிஇஓவாக இருக்கும் தனது வேலையை ஒரு கட்டத்தில் ஏஐ செய்ய ஆரம்பிக்கும் என்றும் அது தனக்குப் பெருமையையே தரும் என்றும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஓபன்ஏஐ தான் ஏஐ சிஇஓ கீழ் இயங்கும் முதல் நிறுவனமாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அது எனக்கு அவமானமாகவே இருக்கும்" என்றார்.

புதிய எல்லைகள்

ஓபன்ஏஐ நிறுவனம் ஏஐ டூல்களை புதிய எல்லைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் இதில் மற்றவர்களுக்குத் தனது நிறுவனம் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஓபன்ஏஐ நிறுவனத்தைத் தன்னை விட ஒரு மெஷின் சிறப்பாக வழிநடத்தும் என்றும் இது குறித்தே தான் அதிகம் சிந்திப்பதாகவும் தெரிவித்தார். மேலும், நம்மில் பலரும் நினைப்பதைப் போல இந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் ஆல்ட்மேன் தெரிவித்தார். 10க்கும் குறைவான ஆண்டுகளில் இது நடக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

முதல்முறை இல்லை

இதுபோல முழுக் கட்டுப்பாட்டையும் ஏஐ வசம் ஒப்படைப்பது குறித்து சாம் ஆல்ட்மேன் பேசுவது இது முதல்முறை இல்லை. கடந்த காலங்களிலும் அவர் பல முறை ஏஐ சிறப்பாக நிறுவனங்களை வழிநடத்தும் என்று அவர் பேசியுள்ளார். அப்படி ஏஐ ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கும்போது நாம் என்ன செய்யலாம் என்பது குறித்தும் அவர் விளக்கியிருக்கிறார்.

இது தொடர்பாக முன்பு ஒரு நேர்காணலில், "எனக்கு ஒரு பண்ணை உள்ளது.. அங்குச் சில காலம் இருந்துள்ளேன். அந்த வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. டிராக்டர்களை ஓட்டிக்கொண்டு, எனக்குத் தேவையான பொருட்களை நானே விளைவித்து வந்தேன். அது அழகான காலம்.. ஏஐ எனது வேலையை எடுத்துக் கொண்டால் நான் மீண்டும் அங்குச் சென்றுவிடுவேன்" என்றார்.

ஏஐ வேலையிழப்பு

ஏஐ காரணமாக மிக பெரிய வேலையிழப்பு ஏற்படும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், அதை ஆமோதிக்கும் விதமாகவே ஆல்ட்மேன் கருத்து இருக்கிறது. திரும்பத் திரும்பச் செய்ய வேண்டிய வேலைகளை நிச்சயம் ஏஐ எடுத்துக் கொள்ளும் என்பதையே சாம் ஆல்ட்மேன் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறார்.

இது தொடர்பாக அவர், "குறுகிய காலத்தில் நிச்சயம் ஏஐ பல வேலைகளை அழிக்கும். ஆனால் நீண்ட கால நோக்கில் மற்ற அனைத்துத் தொழில்நுட்பப் புரட்சிகளையும் போலவே, ஏஐ வந்த பிறகும் நாம் முற்றிலும் புதிய விஷயங்களைக் கண்டுபிடிப்போம் என்று நான் கருதுகிறேன்" என்று அவர் கூறினார். அதாவது ஏஐ காரணமாகக் குறுகிய காலத்தில் பல வேலையிழப்புகள் ஏற்படும் என்ற போதிலும் வரும் காலங்களில் புதிய வேலைவாய்ப்பு சந்தை உருவாகும் என அவர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+