பல லட்சம் ஐடி வேலைகள் காலி! AI காட்பாதர் கொடுத்த நேரடி எச்சரிக்கை.. இனிமேல் கஷ்டம் தான் போல!
சியாட்டில்: ஏஐ துறை நாளுக்கு நாள் முன்னேறி வரும் நிலையில், ஐடி துறையில் இதனால் மிகப் பெரிய மாற்றம் ஏற்படலாம் என்றும் அதிகளவில் வேலையிழப்புகள் ஏற்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே இது தொடர்பான கேள்விக்கு ஏஐ காட்பாதராக அறியப்படும் ஜெஃப்ரி ஹிண்டன் பதிலளித்துள்ளார். ஏஐ காரணமாக எந்த மாதிரியான வேலைகள் போகும் என்றும் அவர் தனது கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவின் (AI) அதிவேக வளர்ச்சி தொழில்நுட்பத் துறையில் பெரிய மாற்றங்களை உருவாக்கி வருகிறது. மிக பெரிய சர்வதேச நிறுவனங்கள் தொடங்கி சின்ன ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வரை எல்லாமே ஏஐ நோக்கிச் செல்கிறது. இதனால் பல நிறுவனங்களில் பணிநீக்கமும் கூட நடக்கவே செய்கிறது.

ஏஐ நிறுவனங்கள்
பல நிறுவனங்கள் AI மூலம் வேலைகளை வேலையைத் தானியங்கு முறையில் மாற்றுகிறது. இதனால் பல நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடைபெறுகிறது. அல்லது புதிதாக ஆட்களை வேலைக்கு எடுப்பதைப் பல நிறுவனங்கள் நிறுத்திவிடுகின்றன. குறிப்பாக ஐடி துறையில் இந்த வேலையிழப்புகள் மிக அதிகமாகவே இருக்கிறது. இதற்கிடையே ஏஐ காட்பாதர் என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன் இது குறித்து எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
எந்த வேலைகளுக்கு ஆபத்து
அதாவது ஏஐ நாளுக்கு நாள் வேகமாக முன்னேறி வருவதால்.. இனிமேல் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பது உண்மையில் வேலையைத் தருமா என்பதே பலரது கேள்வியாக இருக்கிறது. அதற்குப் பதிலளித்த ஜெஃப்ரி ஹிண்டன், வரும் காலங்களிலும் நிச்சயம் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பின் முக்கியத்துவம் குறையாது என்றார். அவை தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே இருக்கும் என அவர் குறிப்பிட்டார். அதேநேரம் ஐடி துறையில் மிட் லெவல் வேலையில் இருப்போரின் பணிப் பாதுகாப்பாக இருக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது என்ற அவர், ஏஐ மூலம் அவை மாற்றி அமைக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு என்பது வெறும் கோடிங் குறித்த படிப்பு என நினைக்கிறார்கள். ஆனால், அப்படி இல்லை அதைத் தாண்டி நிறைய இருக்கிறது. அதேநேரம் ஒரு மிடில் லெவல் கோடிங் ஊழியராக இருப்பது நீண்ட காலத்திற்குப் பாதுகாப்பாக இருக்காது என்றே நினைக்கிறேன். ஏனென்றால் அந்த வேலைகளை ஈஸியாக ஏஐ டூல்களால் செய்ய முடியும்.
கம்ப்யூட்டர் சயின்ஸ்
அதேநேரம் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பின் உண்மையான மதிப்பு என்பது வெறுமன கோடிங் மட்டும் இல்லை.. அமைப்புச் சிந்தனை, கணிதம், கட்டமைக்கப்பட்ட சிக்கல் தீர்வு போன்ற அடிப்படை விஷயங்களை கற்றுக் கொள்கிறோம். எனவே, கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் நீண்ட காலத்திற்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
ஓபன்ஏஐ தலைவர் ப்ரெட் டெய்லரும் கிட்டத்தட்ட இந்தக் கருத்தை ஆமோதித்தார். கம்யூட்டர் சயின்ஸ் என்பது வெறும் கோடிங் எழுதுவது மட்டுமில்லை என்ற அவர், அதைத் தாண்டிப் பல விஷயங்கள் இதில் இருப்பதாகக் குறிப்பிட்டார். சிஸ்டம் குறித்து முழுமையாகத் தெரிந்து கொள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ் மிக முக்கியமாக உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏஐ
கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே ஏஐ துறை தான் வேகமாக வளர்ந்து வருகிறது. பல பில்லியன் டாலர்கள் இதில் முதலீடுகள் செய்யப்படுகின்றன. இருப்பினும், ஏஐ துறையில் bubble உருவாகியுள்ளதாகப் பல்வேறு வல்லுநர்களும் எச்சரித்துள்ளனர். இந்த bubble வெடிக்கும் போது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளனர்.
-
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications