அவுட் ஆஃப் கண்ட்ரோலில் AI.. "இந்த" ஒரு விஷயத்தை மட்டும் நாம் செய்யவே கூடாது! ஏஐ காட்பாதர் எச்சரிக்கை
சியாட்டில்: AIக்கு உரிமைகளை வழங்க வேண்டும் என்று சொல்லி ஒரு தரப்பு கோரிக்கைகளை விடுத்து வரும் நிலையில், இதை ஏஐ காட்பாதர் யோஷுவா பெங்கியோ கடுமையாக எச்சரித்துள்ளார். இதை ஏலியன்களுக்கு குடியுரிமை வழங்குவதோடு ஒப்பிட்ட அவர், இதுபோல நடந்தால் எதிர்காலத்தில் ஏஐகளை மனிதர்களால் கட்டுப்படுத்தவே முடியாமல் போய்விடும் என்றும் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாகவே AIஐ சுற்றியே உலகமே செயல்பட்டு வருகிறது. AI வந்த பிறகு உலகமே படுவேகமாக மாறி வருகிறது. இதற்கிடையே ஒரு தரப்பு AI டூல்களுக்கு உரிமைகளைத் தர வேண்டும் என ஆரம்பித்துள்ளனர். அதாவது மனிதர்களைப் போல AI டூல்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கை

ஏஐ காட்பாதர்
இருப்பினும், இதைச் செயற்கை நுண்ணறிவு துறையின் 'காட்பாதர்' என அழைக்கப்படும் யோஷுவா பெங்கியோ கடுமையாக எச்சரித்துள்ளார். ஜியோஃப்ரி ஹின்டன் மற்றும் யான் லெகுன் ஆகியோருடன் இந்த பெங்கியோயும் ஏஐ காட்பாதர் என்றே அழைக்கப்படுகிறார். 'தி கார்டியன்' இதழுக்கு இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் விரிவான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
AI-க்கு உரிமைகள் வழங்குவது என்பது ஏலியன்களுக்கு குடியுரிமை வழங்குவதற்குச் சமமானது என்றார். மேலும், இந்த விவகாரத்தைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் இதை மிகத் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். AI-க்கு உரிமைகளைக் கொடுப்பது பேரழிவுக்கு நம்மை அழைத்துச் செல்லும் என்றும், மக்கள் இது குறித்து தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் என்றும் பெங்கியோ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
வேகமாக மாறும் AI
செயற்கை நுண்ணறிவு இப்போது நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வருகிறது. அதன் மாடல்கள் முன்னெப்போதையும் விட வேகமானதாகவும், உற்பத்தித்திறன் மிக்கதாகவும் மாறி வருகிறது. இதனால் AIகளின் பயன்பாடுகளும் அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் மனிதர்களைப் போலவே சிந்திக்கும் ஏஜிஐ மாடல்களும் வரவுள்ளன. இவை ஏஐ மற்றும் மனிதர்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியைக் குறைக்கும்.
பெங்கியோவின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து AIக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்து தீவிர விவாதம் எழுந்துள்ளது. AIக்கு சட்டப்பூர்வ உரிமைகள் வழங்கப்பட்டால், அவை மனிதர்களுக்கு அளிக்கப்படும் அதே உரிமைகளுடன் நடத்தப்பட வேண்டும். இது இப்போது பெரிய சிக்கலாகத் தோன்றாவிட்டாலும் எதிர்காலத்தில் மிகப் பெரிய தலைவலியாக நமக்கே மாறும்.
மிக பெரிய ரிஸ்க்
மேலும், இதனால் எதிர்காலத்தில் AIகளை மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாத நிலையும் கூட ஏற்படலாம். மேலோட்டமாகப் பார்க்கும்போது, AIக்கு சட்டப்பூர்வ உரிமைகளை வழங்குவது விசித்திரமான யோசனையாகத் தோன்றாமல் இருக்கலாம். ஆனால், உண்மையில் இது தொடர்பாகத் தீவிர விவாதம் நடந்தே வருகிறது. ஒரு தரப்பினர் ஏஐக்கு உரிமை வேண்டும் எனப் பேச ஆரம்பித்துள்ளனர்.
இருப்பினும், அப்படி உரிமை வழங்கப்பட்டால்.. எதிர்காலத்தில் மனிதக்குலம் AI மீதான கட்டுப்பாட்டை இழந்துவிடக்கூடும் என்று யோஷுவா பெங்கியோ சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக அவர், "இன்றைய சில குறிப்பிட்ட AI மாடல்கள் ஏற்கனவே தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள ரெடியாகும் அறிகுறிகளைக் காட்டுகின்றன. அவற்றுக்கு உரிமைகளை நாம் வழங்கினால் எதிர்காலத்தில் அதை ஷட் டவுன் செய்ய அனுமதி இல்லை போகும்" என்றார்.
ஏன் ஆபத்து
இதில் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள ஆரம்பிப்பது என்று அவர் சொல்லியுள்ளது முக்கியம். அதாவது இப்போது நாம் கம்பியூட்டரை யூஸ் செய்கிறோம். அதைப் பயன்படுத்தி முடித்த பிறகு அதை ஆஃப் செய்யும்போது, அது ஆஃப் ஆக மாட்டேன் என அடம்பிடித்தால் என்னவாகும். அதுபோலத் தான் ஏஐ டூல்களை க்ளோஸ் செய்ய முடியலும் போது அது தன்னை தானா காப்பாற்றிக் கொள்ள முயல்கிறதாம். அதாவது மனிதர்களைச் சொல்வதைக் கேட்க மாட்டேன் எனச் சொல்லலாம் என்கிறார். இது மிகப் பெரிய ஆபத்தாகப் போகலாம் என பல்வேறு தரப்பினரும் எச்சரிக்கிறார்கள்.
-
பங்குச்சந்தையில் வெடிக்கக் காத்திருக்கும் 'ஏஐ' பபுள்? ZOHO ஸ்ரீதர் வேம்புவின் அதிரடி எச்சரிக்கை பின்னணி! -
80 பிளஸ் ஏஐ டூல்ஸ்.. நீங்கள் ஒரு மாதத்தில் செய்யும் வேலைகளை.. சில நிமிடங்களில் செய்யும் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications