தனுஷை விட பெரிய நடிகர்கள் இல்லையா? அவங்க ஏன் இதை பண்ணல? தேசிய விருது சர்ச்சைக்கு கஸ்தூரிராஜா விளக்கம்
சென்னை: 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து சோசியல் மீடியா முழுக்க தனுஷ் பற்றி தான் பேசப்பட்டு வருகிறது. இந்த முறை ராயன் மற்றும் கேப்டன் மில்லர் படத்திற்காக தனுஷுக்கு இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், அதிகமான விமர்சனங்களும் எழுந்து வருகிறது.
இரண்டு படங்களிலும் வன்முறை காட்சிகள் அதிகம். ரத்தம் தெரிக்கும் காட்சிகள் தான் நிறைய இருக்கிறது. இப்படிப்பட்ட படங்களுக்கு தேசிய விருது கொடுப்பது சரியா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக லப்பர் பந்து, வாழை, மெய்யழகன், தங்கலான் உள்ளிட்ட பல படங்கள் போன வருடம் வந்த போதும் அந்த படங்களுக்கு கிடைக்காமல் இந்த படத்திற்கு மட்டும் விருது கொடுக்கிறார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இயக்குநர் கஸ்தூரிராஜா பேட்டி
இது குறித்து தனுஷின் அப்பா கஸ்தூரிராஜா பேசும் போது, தனுஷுக்கு மீண்டும் தேசிய விருது கிடைத்தது ரொம்ப மகிழ்ச்சி. இந்த ரெண்டு விருதுகளுமே அவனுடைய உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம். இதில் அவன் எந்த இன்ஃப்ளூயன்ஸ் பண்ணவில்லை. இது அரசும், ஜூரி உறுப்பினர்களும் சேர்ந்து எடுத்த முடிவு. என் மகனுக்கு இந்த முறை இரண்டு விருதுகள் கிடைத்தது எனக்கு ரொம்ப பெருமையான விஷயம் என்று கூறி இருக்கிறார்.
அதோடு நாங்கள் விருது அறிவித்த அன்று தனுஷ் வீட்டுக்கு தான் போய்க் கொண்டிருந்தோம். உடனே அங்க போய் இந்த சந்தோஷத்தை கேக் வெட்டி கொண்டாடி இருந்தோம் என்று சொல்லி இருந்தார். மேலும் தேசிய விருது அறிவித்த பிறகு தனுஷ் பற்றி பல சர்ச்சைகள் விமர்சனங்கள் எழுந்து வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

தனுஷின் அப்பா விளக்கம்
அதற்கு கஸ்தூரிராஜா, விமர்சனம் எதற்காக வருதுன்னு எனக்கு தெரியல. அதற்கு நாம ஒன்னும் பண்ண முடியாது. தனுஷை விட பெரிய நடிகர்கள் தமிழ்நாட்டில் எத்தனை பேர் இருக்காங்க? அவர்கள் முயற்சி செய்து இன்ஃப்ளூயன்ஸ் பண்ணி இந்த விருது வாங்கி இருக்க முடியாதா? இது தேர்வு குழு எடுக்கிற முடிவு என்று நான் நினைக்கிறேன்.
தேசிய விருது அறிவித்ததும் கதறி அழுத மகாராஜா சாச்சனா.. நெகிழ வைத்த காரணம்.. உருக்கமான பதிவு
மற்றபடி தனுஷுக்கு அவ்வளவு பெரிய புத்திசாலித்தனம் கிடையாது. எங்கேயாவது போய் 4 பேரை பார்த்து ஐயா எனக்கு இந்த அவார்ட் கொடுங்க என்று கெஞ்சுகிறவர் கிடையாது என்று சொல்லி இருக்கிறார். மேலும் இப்போ தான் அவர் புதுசா அவார்டு பாக்குறாரா என்ன? ஏற்கனவே ஆடுகளம், பொல்லாதவன், அசுரன் படத்துக்கு தேசிய விருது வாங்கியிருக்கிறார். அதற்கு முன்பு பல அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
தேசிய விருது சர்ச்சை
அதனால அவார்டுக்காக ஏங்குற பையனும் தனுஷ் கிடையாது. கொடுக்கிற அவார்ட்டை மகிழ்ச்சியாக ஏத்துக்கணும் என்று பதில் சொல்லி இருக்கிறார். அதோடு இந்திய அளவில் சிறந்த நடிகராக மம்முட்டி சார் வங்கி இருக்கிறார். அது எவ்வளவு பெரிய விஷயம். அதை எல்லாம் நாம மனசார பாராட்ட வேண்டியதுதான் என்றும் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
