சோலி முடிஞ்சு.. ஆப்பு வைக்குது ஏஐ! காலியாகப் போகும் ஐடி வேலைகள்! இதை செய்தால் மட்டும் தப்பிக்கலாம்!
சென்னை: உலக அளவில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ-யின் அதிகரித்து வரும் நிலையில் ஐடி துறையில் பணிநீக்கம் என்பது சர்வ சாதரணமாகிவிட்டது. கூகுள், மெட்டா, டிசிஎஸ் உள்ளிட்ட உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வருகிறது. கிளவுட், ஏஇ, சைபர் செக்யூரிட்டி போன்ற துறைகளில் திறன்களை மேம்படுத்திக் கொள்வது மட்டுமே ஏஐ உலகில் போட்டியை சமாளிக்க உதவும் எனவும் இல்லையென்றால், வேலை இழப்பை தவிர்க்க முடியாது என்கின்ற தொழில்நுட்ப நிபுணர்கள்.
இந்தியாவின் முக்கியமான வேலை வாய்ப்பு துறைகளில் ஒன்று தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறை. உலகளவில் மென்பொருள் மற்றும் சேவை ஏற்றுமதியில் இந்தியா முன்னணி நாடாக இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.
ஆனால் தற்போது இந்த துறையில் வேலையிழப்பு அச்சம் அதிகரித்துள்ளதாக தொழில்நுட்ப வட்டாரங்கள், தெரிவிக்கின்றன. ஏஐ வருகைக்குப் பிறகு ஐடி துறையில் புரட்சி ஏற்பட்டாலும் அதற்கேற்றார் போல் தங்களை அப்டேட் செய்து கொள்ளாதோர் தொழில்நுட்ப நிறுவனங்களால் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

ஏஐ தாக்கம்
மேலும், உலக அளவில் பிரபலமான மைக்ரோசாப்ட், கூகுள், இன்ஃபோசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை லட்சக்கணக்கை எட்டும் என்கின்றனர். முதலாவது காரணம், ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு. முன்னர் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் செய்து வந்த வேலைகளை, இப்போது ஆட்டோமேஷன் சாப்ட்வேர் சில நிமிடங்களில் செய்து முடித்து விடுகிறது.
ஐடி வேலை
இதனால் அடிப்படை குறியீடு எழுதுதல், பராமரிப்பு போன்ற பணிகளில் மனித வள தேவை குறைந்துள்ளது. இரண்டாவது காரணம், உலகளாவிய பொருளாதார மந்தநிலை. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற முக்கிய சந்தைகளில் பொருளாதார சிக்கல்கள் அதிகரித்துள்ளதால் அங்குள்ள நிறுவனங்கள் செலவுகளை குறைக்க முனைகின்றன. இதனால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு வரும் புது ஒப்பந்தங்கள் குறைந்து விட்டன.
வேலை இழப்பு
மூன்றாவது காரணம், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு மாற்றம். முன்னர் "சாப்ட்வேர் டெவலப்மென்ட்" என்ற அடிப்படை சேவைகள் அதிகம் தேவைப்பட்டாலும், இப்போது சைபர் பாதுகாப்பு, கிளவுட், டேட்டா அனலிடிக்ஸ் போன்ற மேம்பட்ட சேவைகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. அதற்கான திறன்கள் இல்லாத ஊழியர்கள் பின்தங்கும் அபாயம் உள்ளது.
பாதிப்பு எப்படி இருக்கும்?
இந்த வேலையிழப்பு அபாயம் குறிப்பாக இளம் ஊழியர்கள் மற்றும் மத்திய நிலை ஊழியர்களை பாதிக்கும் வாய்ப்பு அதிகம். அனுபவம் குறைவானவர்கள் எளிதில் மாற்று வேலை கிடைக்காமல் சிக்கிக் கொள்ளலாம். மத்திய நிலை ஊழியர்கள் சம்பளம் அதிகமாக இருப்பதால் முதலுதவி நடவடிக்கையாக அவர்களையே நிறுவனங்கள் குறிக்கக் கூடும். மேலும், இந்தியாவின் சென்னையிலும் பெங்களூருவிலும் இருக்கும் முக்கிய ஐடி மையங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே சில முன்னணி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையிழக்கச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பதையும் கவனிக்க வேண்டும்.
வழி என்ன?
இது முற்றிலும் எதிர்மறையான நிலை அல்ல. அதே சமயம், மாற்றங்களை ஏற்கும் திறன் அவசியம் ஊழியர்களுக்கு இருக்க வேண்டும். புதிதாக ஐடி துறையில் கால் பதிப்பவர்களும், ஏற்கனவே இருப்பவர்களும், ஏஐ, கிளவுட், சைபர் செக்யூரிட்டி போன்ற துறைகளில் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். குறுகிய கால "ஸ்கில் அப்கிரேட்" படிப்புகள் ஐடி ஊழியர்களுக்கு பெரிதும் உதவும். புதிய தொழில்நுட்ப தேவைகளுக்கு ஏற்ப தொடர்ந்து கற்றல் (Continuous Learning) மேம்படுத்திக் கொள்வதே பாதுகாப்பான வழி என்கின்றனர் ஐடி வல்லுநர்கள்.
இந்தியா ஐடி
ஐடி துறையில் வேலையிழப்பின் அபாயம் உண்மை தான். ஆனால் அதே சமயம் புதிய வாய்ப்புகளும் உருவாகிக் கொண்டே உள்ளன. உலகளவில் இந்திய ஐடி திறன்களுக்கு இன்னும் பெரிய தேவை உள்ளது. இந்தியாவில் உள்ள ஐடி திறன்கள் உலகளவில் தேவைப்படும் நிலையில், தகுந்த நேரத்தில் திறன் மேம்பாடு செய்தால் வேலையிழப்பை தவிர்க்கவும், புதிய வாய்ப்புகளைப் பெறவும் முடியும் என்பதையும் ஐடி துறையில் இருப்பவர்கள் உணர வேண்டும்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications