ரூ.70,000க்கு ஆசைப்பட்டு.. கையை நீட்டிய பொள்ளாச்சி உதவி ஆய்வாளர்! இப்படி மாட்டிக்கிட்டாரே!

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: லஞ்ச ஒழிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இப்படி இருக்கையில், ரூ.70,000 லஞ்சமாக பெற முயன்றதாக பொள்ளாச்சி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பியிருக்கின்றனர். அதை உதவி ஆய்வாளர் வாங்கும்போது கையும் களவுமாக சிக்கியிருக்கிறார்.

Coimbatore

வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம்

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவரு கணவர் தனது காரை கோவை பொள்ளாச்சியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரிடம் அடகு வைத்து பணம் பெற்றிருக்கிறார். ஆனால், இவரது பைக் தவறான காரியங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்ததாக கூறி, மற்றொரு சாவியை போட்டு, பைக்கை வீட்டுக்கு ஓட்டி வந்திருக்கிறார். என்ன இருந்தாலும் அது அடமானம் வைக்கப்பட்ட பைக். எனவே அடமானம் பிடித்தவர் சும்மா இருப்பாரா? ஒன்னு காசு கொடு.. இல்லைன்னா.. பைக்கை கொடு என்று கேட்டு பொள்ளாச்சி சி-1 காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ரூ.70,000 லஞ்சம்

இந்த வழக்கை சிறப்பு உதவி ஆய்வாளர் பூபதி கையில் எடுத்திருக்கிறார். ரவிக்குமாரின் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பூபதி, ருஜைனா மற்றும் அவரது கணவரின் செல்போன்களை பிடுங்கி வைத்திருக்கிறார். அதற்குள் அவருக்கு காட்டூருக்கு பணியிட மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. எனவே, வழக்கை முடித்து வைக்க சமாதானம் பேசியிருக்கிறார் ரவிக்குமார். வழக்கிலிருந்து உங்களை விடுவிக்க வேண்டும் எனில் ரூ.70,000 வெட்டுங்கள் என்று பேரம் பேசியிருக்கிறார்.

வசமாக சிக்கிய அதிகாரி

அடமானம் வைக்கப்பட்ட பைக்கே அவ்வளவு தொகை வராது. அப்படி இருக்கையில் இவ்வளவு பெரிய அமௌன்ட்டுக்கு எங்கே போவோம்? என யோசித்த ருஜைனா தம்பதி, லஞ்ச ஒழிப்பு போலீசாரை அனுகியிருக்கின்றனர்.

அவர்கள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து அனுப்பியிருக்கின்றனர். உக்கடம் பேருந்து நிலையம் அருகே, லஞ்ச பணத்தை உதவி ஆய்வாளர் பூபதி வாங்கும்போது, மறைந்திருந்த போலீசார் பூபதியை கைது செய்திருக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று முதல்வர் விஜய் கூறியிருந்த நிலையில், தற்போது லஞ்சம் வாங்கியதாக சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

எப்படி சிக்குகிறார்கள்?

லஞ்ச ஒழிப்பு போலீசார் பினோப்தலின் என்கிற வேதிப்பொருள் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்புவார்கள். இந்த வேதிப்பொருட்களுக்கு மணம், நிறம் கிடையாது. ரூபாய் நோட்டின் மீது தூவும் போது அது, ரூபாய் நோட்டு கலருடன் ஒன்றிப்போய்விடும். எனவே ரசாயனம் தடவிய நோட்டு எது? தடவாத நோட்டு எது? என்பதை கண்டுபிடிக்க முடியாது.

நோட்டுகளை தொடும்போது பினோப்தலின் கைகளில் ஒட்டிக்கொள்ளும். உடனே மறைந்திருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றவரை கைது செய்வார்கள். அவர்களின் கைகளை சோடியம் கர்பனேட் கலந்த தண்ணீர் மாதிரி, நிறமற்ற திரவத்தில் கழுவ சொல்வார்கள். அப்படி கழுவும்போது அந்த திரவம் பிங்க் நிறத்தில் மாறும். இதை சீல் வைத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள். இப்படித்தான் லஞ்சம் பெறுபவர்கள் மாட்டுவார்கள்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் பினோப்தலின் பொடிக்கு வாசனை கிடையாது என்பதால் முன்கூட்டியே மோப்ப நாய் வைத்தோ.. UV விளக்குகள் மூலமாகவோ ரசாயனம் தடவிய நோட்டுக்களை கண்டுபிடிக்க முடியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+