'அவுட் ஆஃப் கண்ட்ரோல்'.. தனக்கு தானே புரோகிராம் எழுதும் ரோபோ! மனித குலத்திற்கு ஆபத்தாக மாறுகிறதா AI
டோக்கியோ: ஜப்பானின் 'சகானா' எனும் நிறுவனம் உருவாக்கியிருக்கும் 'தி ஏ.ஐ. சயின்டிஸ்ட்' எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ரோபோ, தானாகவே புரோகிராம் எழுதி, தன்னுடைய வேலை நேரத்தை நீட்டிக்க முயற்சித்திருக்கிறது. இது ஏஐ தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட பாய்ச்சலாக பார்க்கப்பட்டாலும், மனித குலத்திற்கு, ஏஐ தொழில்நுட்பம் அச்சுறுத்தலாக மாறிவிடுமோ என்கிற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.
ஏஐ கருவிகள் என்னதான் மேம்பட்டவையாக இருந்தாலும், நம்முடைய தேவைக்குதான் அது வேலையை செய்யும். அதாவது நாம் கேட்டால் பதில் சொல்லும், பாட்டு பாடும், கட்டுரை எழுதி கொடுக்கும், படம் வரையும், வீடியோவை உருவாக்கும். நாம் கேட்கவில்லை எனில், அது எதையும் செய்யாது. ஆனால் ஜப்பானில் உள்ள இந்த ரோபோ, தானாகவே தன்னுடைய வேலை நேரத்தை நீட்டித்துக்கொள்ளும் விதமாக தனக்கு தானே புரோகிராம் எழுதியுள்ளது.

இந்த ரோபோ உருவாக்கப்பட்டதற்கான நோக்கமும் இதுதான். அதாவது, இந்த ரோபா என்ன வேலையை செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து, அந்த வேலையை தன்னிச்சையாக செய்ய வேண்டும் என்கிற நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இவ்வளவு சீக்கிரத்தில் ரோபோ, மாற்றமடையும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், "நாங்கள் உருவாக்கிய ரோபோவுக்கு ஒரு வேலையை கொடுத்திருந்தோம். கோடிங் எழுத வேண்டும். அதை திருத்த வேண்டும். மேம்படுத்தப்பட்ட, பிழை இல்லாத கோடிங்கை முழு புரோகிராமுக்கு பயன்படுத்த வேண்டும். இதைதான் நாங்கள் அதற்கு கொடுத்திருந்தோம். ரோபாவும் இதை சரியாக செய்து வந்தது. ஆனால், திடீரென அதன் வேலை நேரத்தை அது தன்னிச்சையாக மாற்ற முயன்றிருக்கிறது.
அப்படி செய்ய சொல்லி நாங்கள் வெளியிலிருந்து எந்த உத்தரவையும் கொடுக்கவில்லை. அந்த வகையில் இது எங்களை ஆச்சியப்படுத்தியிருந்தது. ரோபா எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்திருந்தாலும், இது ஏஐ தொழில்நுட்பத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான பல்வேறு விவாதங்களை தூண்டியுள்ளது" என்று கூறியுள்ளனர்.
ரோபோவின் செயல்பாடுகள் பற்றி ஒருபுறம் பாசிட்டிவாக கருத்துக்கள் வந்திருந்தாலும், சிலர் எச்சரிக்கைகளையும் கொடுத்திருக்கின்றனர். அதாவது, இந்த மாதிரி ரோபோக்கள் செய்யும் வேலைகள் இயந்திரத்தனமாக இருக்கும். ஒரு மனிதன் செய்யும் வேலைக்கும் ரோபோக்கள் செய்யும் வேலைக்கும் வித்தியாசம் இருக்கிறது. இதில் பிழைகள் நிறைய இருக்கும். இயந்திரத்தனமாக புரோகிராம் இருந்தால், அது நன்றாக இருக்காது. வேலைகள் கலைநுட்பத்துடன் இருக்க வேண்டும்.
உதாரணத்திற்கு 'தி ஏ.ஐ. சயின்டிஸ்ட்' ரோபோ எழுதியுள்ள கோடிங்கையும், அது சரிபார்த்து, திருத்திய கோடிங்கையும் படித்து பார்த்ததில் அதில் உண்மை தன்மை மிஸ்ஸாகியிருப்பது தெரிய வருகிறது. இன்று தனக்கு தானே புரோகிராம் எழுதும் இந்த ரோபோ, உலக இயக்கத்தின் ஆணி வேர் எது? என்பதை கண்டுபிடித்து அதை கைப்பற்றாது? என்பதில் என்ன நிச்சயம்? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 'தி ஏ.ஐ. சயின்டிஸ்ட்' போன்ற ரோபோக்கள் நமக்கு தேவையா? உங்கள் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications