இனி ஒருத்தரும் தப்பிக்க முடியாது.. எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் குறிவைத்து தூக்கும் AI
டெல்லி: ஏஐ வளர்ச்சி பல்வேறு துறைகளிலும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும் பிக்பாக்கெட் முதல் பெரிய தீவிரவாதிகள் வரை யாராக இருந்தாலும் நொடிகளில் அவர்களைக் கண்டறியும் புதிய ஏஐ ஸ்மார்ட் கிளாஸ்களை டெல்லி போலீசார் வாங்கியுள்ளனர். இந்த கிளாஸ்கள் எப்படி வேலை செய்யும்.. இதன் சிறப்புகள் என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
ஏஐ வளர்ச்சி வேகமாக இருக்கும் சூழலில் அது பல்வேறு துறைகளிலும் நமக்கு மிகப் பெரியளவில் உதவுகிறது. இது நமது வாழ்க்கையை ரொம்பவே ஈஸியாக மாற்றிவிடுகிறது. அப்படித் தான் டெல்லி போலீசார் இப்போது ஏஐ திறன் கொண்ட ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

ஏஐ கிளாஸ்
குடியேற்றத் தினக் கொண்டாட்டங்களின் போது பாதுகாப்பு நடவடிக்கைக்காக இதைப் பயன்படுத்த டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர். டெல்லி போலீசாரின் இந்த நடவடிக்கை தேசியத் தலைநகரின் பாதுகாப்பை வலுப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் கிளாஸ்கள் ஃபேஷியல் ரெகக்னிஷன் சாப்ட்வேர் (facial recognition software) உடன் இயங்கும் வசதியைக் கொண்டுள்ளது. மேலும், தெர்மல் இமேஜிங் வசதியும் உள்ளது. இதனால் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் ரியல் டைமிலேயே சந்தேக நபர்களை போலீசாரால் பிடிக்க முடியும். இந்த அதிநவீன கிளாஸ்களை தயாரித்தது இந்திய நிறுவனம் என்பது மற்ற சிறப்பாகும்!
எப்படி வேலை செய்யும்?
கிளாஸை அணிந்துள்ள அதிகாரிகளின் மொபைல் போன்களுடன் இணைந்து இந்தக் கண்ணாடிகள் செயல்படும். ஒருவரைப் பார்க்கும்போது அவரது முகத்தின் டேட்டாவை இந்த கண்ணாடி போலீஸ் டேட்டாவுடன் ஒப்பிடும். அவர் மீது ஏற்கனவே வழக்குகள் எதாவது இருக்கிறதா.. அவர் சந்தேக நபர் பட்டியலில் இருக்கிறாரா என்பதை ஆய்வு செய்து, அந்த தகவல்களை போலீசாருக்கு வழங்கும். அதன் அடிப்படையில் போலீசார் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள்.
போலீஸ் ரெக்கார்ட்டில் பழைய போட்டோ இருந்தாலும் கூட காலப்போக்கில் அவர்கள் முகம் எப்படி மாறியிருக்கும் என்பதைக் கண்டுபிடித்து, அந்தக் கண்ணாடி அலர்ட் செய்யும். எந்தவொரு குற்றப் பின்னணியும் இல்லாத நபர் என்றால் பச்சை கலரில் சிக்னல் வரும். குற்றப் பின்னணி இருக்கும் நபர் என்றால் சிவப்பு கலரில் அலர்ட் வரும். இந்த ஒட்டுமொத்த பிராசஸும் ஓரிரு நொடிகளில் நடந்து முடியும் என்கிறார்கள் அதிகாரிகள்.!
வசதிகள்
ஃபேஷியல் ரெகக்னிஷன் தவிர, இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளில் தெர்மல் இமேஜிங் எனப்படும் வெப்பத்தின் அடிப்படையில் பொருட்களைக் காட்டும் தொழில்நுட்பமும் உள்ளது. இது மறைத்து வைக்கப்பட்டுள்ள உலோகப் பொருட்கள் அல்லது ஆயுதங்களைக் கண்டறிய உதவும். இது தேவையான பாதுகாப்பை உறுதி செய்ய போலீசாருக்கு உதவுகிறது.
இது குறித்து டெல்லி காவல்துறை கூடுதல் ஆணையர் மஹ்லா கூறுகையில், "இந்தக் கிளாஸ்கள் போலீசாரின் செல்போன்கள் மற்றும் கிரைம் டேட்டாபேஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. பச்சை மற்றும் சிவப்பு என சிக்னல்கள் வரும். அதை வைத்தே முதற்கட்ட நடவடிக்கையை போலீசார் விரைந்து எடுக்கலாம்" என்றார்.
ரொம்ப முக்கியம்
முதற்கட்டமாக குடியரசு தின நிகழ்வுகளில் துணை ஆய்வாளர்கள் மற்றும் கள அதிகாரிகள் இந்தக் கண்ணாடிகளைப் பயன்படுத்துவார்கள். எவ்வளவு கண்ணாடிகள் வாங்கப்பட்டுள்ளது.. என்ன ரேட்டுக்கு வாங்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த AI ஸ்மார்ட் கண்ணாடிகள், பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒரு புதிய தொழில்நுட்பப் புரட்சியாகவே பார்க்கப்படுகிறது.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
பங்குச்சந்தையில் வெடிக்கக் காத்திருக்கும் 'ஏஐ' பபுள்? ZOHO ஸ்ரீதர் வேம்புவின் அதிரடி எச்சரிக்கை பின்னணி! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!











Click it and Unblock the Notifications