Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குவாட்டர் புலி.. ஆவேசமான புலி..அமைதிப் புலி.. இதில் எது ஏஐ வீடியோ... கண்டுபிடிக்க முடிகிறதா?

Subscribe to Oneindia Tamil

மும்பை: புலி மனிதனை கண்டால் அமைதியாக கடந்து சென்றுவிடுவது அபூர்வமானது. கண்டிப்பாக புலி ஒருவரை தாக்கும்.. ஆனால் அதேநேரம் சில சமயங்களில் புலி பயந்து போய் ஓடும் சம்பவங்களும் நடந்துள்ளது. அண்மையில் புலிக்கு ஒரு குடிக்காரர் மது குடிப்பதுபோல் வீடியோ பரவியது. இதை பார்த்து பலரும் வாயடைத்துபோனார்கள்.. அதேபோல் ஒரு புலி ஒருவரை கடித்து தூக்கி சென்றது.இன்னொரு வீடியோவில் புலி ஒருவரை தூக்கி கொண்டு வரும். அவர் தண்ணீர் கொடுப்பார். அவரை விடுவதாக இருக்கும். இதில் ஏஐ வீடியோக்களும் உள்ளதால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

ஏ.ஐ. தொழிநுட்பம் நாளுக்கு நாள் நினைத்து பார்க்க முடியாத வகையில் வளர்ந்து வருகிறது. இதனை சரியான விதத்தில் பயன்படுத்தி முன்னேறுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் மறுபுறம் சிலர் தவறான நோக்கத்தில் பயன்படுத்தி பிரச்சினையை உருவாக்கி வருகிறார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

AI Tiger Three realistic AI videos related to tigers Confused tourists and the public

அண்மையில் மத்திய பிரதேசத்தின் பெஞ்ச் புலிகள் காப்பகம் அருகே இரவு நேரத்தில் 52 வயது நபர் முழு மது போதையில், தள்ளாடிய படி செல்கிறார். திடீரென அவர் செல்லும் சாலையில் புலி ஒன்று வழிமறித்து நிற்கிறது. புலியை கண்டால் அஞ்சி ஓடுபவர்களுக்கு நடுவே அந்த நபர் அச்சமின்றி புலியை பார்ப்பதாக உள்ளது. திடீரென அந்த நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மதுபாட்டிலை வெளியே எடுக்கிறார். பின்னர் புலியிடம் சென்று அதன் தலையை தடவி கொடுத்து அதற்கு மதுவை கொடுக்கிறார். வெறும் 6 வினாடிகள் மட்டுமே ஓடியிருந்தது.

இதைக்கண்டு வனத்துறையினரும், சுற்றுச்சுழல் ஆர்வலர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள் இது தொடர்பாக நடத்திய விசாரணையில் வீடியோவில் உள்ள காட்சிகள் போலி எனவும் அவை ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதும் தெரியவந்தது. மேலும் இந்த வீடியோவை கடந்த மாதம் 30-ந் தேதி மும்பையை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியதை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து வனத்துறை வெளியிட்ட அறிக்கையில், "இந்த போன்ற ரீல் மக்களிடம் தவறான செய்திகளை கொண்டு போய் சேர்த்து வருகிறது. மேலும் புலிகள் காப்பகத்தின் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்கிவிடுகிறது. மேலும் இதுபோன்ற தவறான ஏஐ வீடியோக்கள் சுற்றுலா பயணிகளிடையே குழப்பத்தையும் ஏற்படுத்தக்கூடும். இது காட்டு விலங்குகளுக்கு எதிரான தவறான நடவடிக்கையை ஆகும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் முதியவரை புலி தாக்கி இழுத்துச் செல்லும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதேபோல் இன்னொரு வீடியோ அதே இடத்தில் இருக்கிறது. அதில் புலி ஒருவரை தூக்கி கொண்டு வந்து போடுவதாக இருக்கிறது. இப்படி மூன்று வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.ஆனால் இந்த மூன்று பார்க்க தத்ரூபமாக இருந்தாலும், மூன்றுமே ஏஐ வீடியோ தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

எனவே கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்.. எனவே எதையும் வீடியோவில் வருகிறது. ஆடியோவில் வருகிறது என்று நம்பிவிடாதீர்கள். செக்கிலு ஆட்டுன சுத்தமாக உருட்டாகவே இப்போது ஏஐ வீடியோக்கள் இருப்பதால் நம்ப வேண்டாம். ஏஐ டிப் பேக் வீடியோக்கள் வரும் காலத்தில் மிகவும் தத்ரூபமாக மாறும் என்பதால், உண்மை எது பொய் எது என்பதை கண்டுபிடிப்பது கடினமாகவும் வாய்ப்பு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+