மூளையை பாதிக்கும் ஏஐ.. ChatGPT பயன்படுத்தும்போது ஏற்படும் மாற்றம்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

Subscribe to Oneindia Tamil

சியாட்டில்: சின்ன விஷயங்களுக்கும் இப்போது பலரும் ஏஐ டூல்கஎளையே நம்பி இருக்கிறார்கள். இதற்கிடையே ஏஐ டூல்களை ஓவராக நம்பி இருப்பது என்ன மாதிரியான சிக்கல்களை உருவாக்கும் என்பதை விளக்கும் வகையில் ஒரு ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. அதில் ஏஐ டூல்களை தொடர்ந்து பயன்படுத்தும் போது மூளையில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படுகிறது என்பது விளக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் எம்ஐடி மீடியா லேப் நடத்திய ஆய்வில் அவர்கள் மூளையை ஸ்கேன் செய்து ஆய்வு நடத்தியுள்ளனர். சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு டூல்களை தொடர்ந்து பயன்படுத்துவது மூளையில் என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை கண்டறியவே இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

AI chatgpt research AI use

மூளையில் ஏற்படும் மாற்றம்

அதில் அதிகமாக ஏஐ பயன்படுத்துவோருக்கு முக்கியமான சிந்தனை மற்றும் நினைவாற்றல் செயல்பாடுகள் பாதிக்கக்கூடும் என்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வுக்காக 54 மாணவர்களின் மூளை செயல்பாடுகள் இஇஜி கருவிகள் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கட்டுரை எழுதுவது போன்ற வேலைகளுக்கு எப்படி சாட்ஜிபிடியை பயன்படுத்துகிறார்கள்.. அது நீண்ட கால நோக்கில் எப்படி அவர்கள் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்தே ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுரை எழுத தொடர்ந்து சாட்ஜிபிடியை பயன்படுத்தும் மாணவர்களுக்கு நினைவாற்றல் பிரச்சனை ஏற்படுகிறதாம். மேலும், analytical reasoning எனப்படும் பகுப்பாய்வு சிந்தனையுடன் தொடர்புடைய மூளை பகுதிகளில் நரம்பியல் செயல்பாடும் குறைவாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. தகவல்களை தாங்களாகவே புரிந்து கொண்டு, ஒன்றிணைத்து, புதிய விஷயங்களை உருவாக்குவதற்குப் பதிலாக, AI வழங்கும் தகவல்களை சார்ந்திருக்கும் நிலைக்கு அவர்கள் சென்றதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்படுகிறது.

நினைவில் இல்லை

இதன் காரணமாக மாணவர்களுக்கு அவர்கள் எழுதிய கட்டுரையை நினைவில் இருப்பதில்லையாம். அதிகபட்சமே கொஞ்ச நேரம் மட்டுமே அவர்களுக்கு தங்கள் கட்டுரை நினைவில் இருப்பதாகவும் அதன் பிறகு தங்கள் கட்டுரையிலேயே என்ன இருக்கிறது என்பதை நினைவுகூருவதில் அவர்களுக்கு சிரமப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் கட்டுரை எழுத தொடர்ந்து AI டூல்களை நம்பி இருப்போரின் கட்டுரைகள் காலப்போக்கில் பொதுவானதாக, அதாவது ஒரு டெம்பிளேட்டிற்குள் சிக்கியது போல மாறிவிட்டதாம். அவர்களுக்கான தனித்துவம் இல்லாமல் போய்விட்டதாக ஆய்வு தெரிவிக்கிறது. ஆய்வாளர்கள் இதை ஒரு வகையான மன ரீதியான செயலற்ற நிலை என குறிப்பிட்டுள்ளனர். அதாவது ஒரு விஷயத்தை தாங்களாக சிந்தித்து ஆராய்வதற்கு பதிலாக, ஏஐ வழங்கும் பதிலை ஏற்று கொள்ளும் பழக்கம் அதிகரிப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஐ

அதேநேரம் இந்த ஆய்வு ஏஐ யூஸ் பண்ணாதீர்கள்.. அது ரொம்பவே ஆபத்து என்பது போல முழுமையாக நெகடிவாக கூறவில்லை. மாறாக AIஐ எந்த கட்டத்தில், எப்படி பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம் என சுட்டிக்காட்டுகிறது. ஆரம்பத்தில் எந்தவித ஏஐ உதவியும் இல்லாமல் தாங்களாகவே பணியாற்றிய பின்னர் சாட்ஜிபிடியை பயன்படுத்த தொடங்கிய மாணவர்களிடம் மூளை செயல்பாடு அதிகரித்ததாக ஆய்வு கூறுகிறது.

என்ன செய்ய வேண்டும்

இதன் மூலம் நாம் யோசிக்காமல் நேரடியாக ஏஐ டூல்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, மனித சிந்தனையையும் நாம் யோசிக்கும் முறையையும் மேம்படுத்தும் துணை கருவியாக AIஐ பயன்படுத்தினால் அதன் பயன் அதிகமாக இருக்கலாம் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. எனவே சாட்ஜிபிடி உள்ளிட்ட பிற ஏஐ கருவிகளை பயன்படுத்தும்போது, அது சொல்லும் பதிலை அப்படியே ஏற்று கொள்வதைவிட, அந்த தகவல்களை சரிபார்த்து, சொந்தமாக அதை எப்படி மேம்படுத்தலாம் என்பதை யோசிக்க வேண்டும் என்கிறார்கள்.

இல்லையென்றால் எதிர்காலத்தில் மக்கள் சிந்திக்கும் திறனையே ஏஐ வசம் ஒப்படைத்துவிடுவார்கள் என்றும் இதனால் அறிவாற்றல் வீழ்ச்சி போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடலாம் என எச்சரிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+