AI vs மெஷின் லேர்னிங்.. சம்பளத்தை அள்ளி கொடுக்கும் துறை எது! ஈஸியாக வேலை கிடைக்கும் துறை எது!
சென்னை: இந்த காலத்தில் ஏஐ மற்றும் மெஷின் லேர்னிங் துறைகளில் தான் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த இரண்டிற்கும் சில ஒற்றுமைகள் இருந்தாலும் கூட இரண்டும் வித்தியாசமானவை. ஏஐ மற்றும் மெஷின் லேர்னிங் இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன.. எதற்கு வேலைவாய்ப்பு அதிகம் கிடைக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த காலத்தில் ஏஐ படுவேகமாக வளர்ந்து வருவது அனைவருக்கும் தெரியும். இதனால் ஏஐ மற்றும் மெஷின் லேர்னிங்கில் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. நம்மில் பலரும் ஏஐ மற்றும் மெஷின் லேர்னிங் இரண்டுமே ஒன்று தான் என நினைத்து வருகிறோம். ஆனால், உண்மையில் இரண்டுமே வெவ்வேறு துறைகள். இந்த இரண்டு குறித்தும் நாம் விரிவாகப் பார்க்கலாம்!

செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவு என்பது மனித அறிவு தேவைப்படும் பணிகளைச் செய்யக்கூடிய அமைப்பை உருவாக்குவது. இந்த துறையில் ஒரு விஷயத்தைப் பகுத்து அறிவது, சிக்கலைத் தீர்ப்பது, திட்டமிடுதல் மற்றும் மொழியைப் புரிந்துகொள்வது என பல விஷயங்கள் உள்ளன. தானாக முடிவுகளை எடுக்கக்கூடிய மற்றும் மனிதர்களுடன் இயல்பாகப் பேசக்கூடிய ஒரு டூலை உருவாக்குவதே AI வல்லுநர்களின் வேலையாகும்.
மெஷின் லேர்னிங்
மெஷின் லேர்னிங் என்பது ஏஐ-க்கு கீழ் வரும் ஒரு பிரிவு.. முந்தைய டேட்டாகளை கொடுத்தால் சிஸ்டம் அதை ஆய்வு செய்து புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும். இந்த முறையை உருவாக்குவதுதான் மெஷின் லேர்னிங். அதாவது ஒரு பெரிய டேட்டாவை ஆய்வு செய்து அதில் இருக்கும் பேட்டர்ன்களை அடையாளம் காண்பதே இதன் நோக்கமாகும்.
பல்வேறு துறைகள்
பல்வேறு துறைகளிலும் மெஷின் லேர்னிங் பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் டெக்னிக்கலான விஷயம்.. இத்துறைக்கு புரோகிராமிங், டேட்டா சயின்ஸ் உள்ளிட்டவற்றில் நிபுணத்துவம் தேவைப்படுகிறது. அதாவது AI அறிவார்ந்த அமைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தும்போது, ML இந்த அமைப்புகளை மேம்படுத்த உதவுகிறது.
AI மற்றும் ML ஆகிய இரண்டு துறைகளிலும் சர்வதேச அளவில் வேலைவாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. AI படிப்பை எடுத்தால் ஏஐ பொறியாளர்கள், டேட்டா சயின்டிஸ்ட், ரிசர்ச் சயின்டிஸ்ட் என பல்வேறு துறைகளிலும் வேலை செய்யலாம். இந்த காலத்தில் மிக வேகமாக வளரும் துறையாக ஏஐ இருப்பதால் வேலைவாய்ப்பில் சிக்கல் இருக்காது.
மெஷின்லேர்னிங் படிக்கும் மாணவர்கள் ML பொறியாளர், டேட்டா சயின்ஸ்டிஸ், கம்ப்யூட்டர் விஷன் பொறியாளர் உள்ளிட்ட வேலைகளுக்குச் செல்லலாம். பெரிய டேட்டாவை விரைவாகவும் திறம்படவும் எப்படி அனலைஸ் செய்வது என்பது இதில் விளக்கப்பட்டிருக்கும். இரு துறைகளுமே வேகமாக வளர்ந்து வருவதால் இதில் உள்ளவர்கள் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.
சம்பளம்
இரு துறைகளுமே சம்பளத்தை அதிகம் அள்ளி தரும் துறைகளாகவே இருக்கிறது. இந்தியாவில் ஒப்பீட்டளவில் புதிதாக வேலைக்குச் சேரும்போது AIஐ காட்டிலும் மெஷின் லேர்னிங்கில் சம்பளம் அதிகமாகக் கிடைக்கும். அதேநேரம் சில ஆண்டுகள் அனுபவம் வரும்போது நிலைமை மொத்தமாக மாறுகிறது. அனுபவம் உள்ளவர்களுக்கு மெஷின் லேர்னிங்கை காட்டிலும் ஏஐ துறையில் சம்பளம் அதிகமாகவே கிடைக்கிறது.
வேலைவாய்ப்பு
AI மற்றும் ML என இரு துறைகளிலும் ஊழியர்கள் தேவை அதிகமாகவே இருக்கிறது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, சிங்கப்பூர், ஜெர்மனி, இங்கிலாந்து என பல்வேறு நாடுகளிலும் வேலைவாய்ப்பு அதிகரித்தே வருகிறது. இந்த துறைகளில் உள்ளூர் நிறுவனங்களில் வேலை செய்யும் ஒருவருக்குச் சரியான திறமை இருந்தால் ஈஸியாக வெளிநாடுகளில் கூட வேலை பெறலாம். நிதி, சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் இ-காமர்ஸ் ஆகிய துறைகளிலேயே வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது.
ஏஐ மற்றும் மெஷின் லேர்னிங் என இரண்டுமே இப்போது வேலைவாய்ப்பு கொட்டி தரும் துறைகளாகவே உள்ளன. அதில் எதைத் தேர்வு செய்யலாம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது. மனிதர்களைப் போன்ற அமைப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பவர்கள், தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்குவோருக்கு AI ஏற்றதாக இருக்கும். மறுபுறம் டேட்டா, அல்காரிதம் தொடர்பாக வேலை செய்ய விரும்புவோருக்கு மேஷின் லேர்னிங் சரியாக இருக்கும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications