எமனாக மாறிய நிலக்கடலை.. ஆசையோடு மிக்சர் தின்ற 3 வயது குழந்தை பலி.. இப்படியா நடக்கணும்.. சோகம்
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆசை ஆசையாக மிக்சர் சாப்பிட்டபோது தொண்டையில் நிலக்கடலை சிக்கியதில் துடிதுடித்து 3 வயது குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வீட்டில் இருக்கும் பச்சிளம் குழந்தைகளை கவனமுடன் பார்த்து கொள்ள வேண்டும். அதுவும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வீட்டில் இருந்தால் இன்னும் கூட அதிக கவனம் இருக்க வேண்டும். இதனால் கொஞ்சம் அலட்சியம் காட்டினாலும் கூட அவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
குறிப்பாக குழந்தைகளின் உணவு விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எந்த உணவு கொடுக்கலாம். எந்த உணவை தவிர்க்க வேண்டும் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும்.
இதில் அலட்சியம் காட்டினால் குழந்தைகளுக்கு உடல் உபாதை மட்டுமின்றி உயிரை போய்விடும் அபாயம் ஏற்படலாம். இப்படி தான் கேரளாவில் பெற்றோரின் கவனக்குறையால் 3 வயது குழந்தை பலியாகி உள்ளது. இந்த சோக சம்பவம் குறித்த விவரம் வருமாறு: கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் குன்னும்புரம் கிராமத்தை சேர்ந்தவர் முனீர்.
முனீருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இந்த தம்பதியின் மகன் பெயர் முகமது ரிஜான். வயது 3 ஆகும். இந்நிலையில் தான் முகமது ரிஜான் வீட்டில் ஆக்டிவ்வாக இருப்பான். நேற்று முன்தினம் வீட்டில் 'மிக்சர்' சாப்பிட்டு கொண்டிருந்தான். மிக்சரில் இருந்த நிலக்கடலையை தேடி தேடி முகமது ரிஜான் சுவைத்தான்.
அப்போது எதிர்பாராத விதமாக அவனது தொண்டையில் நிலக்கடலை சிக்கி கொண்டது. இதனால் மூச்சுவிட முடியாமல் முகமது ரிஜான் துடித்தான். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக முகமது ரிஜானை தூக்கி கொண்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முகமது ரிஜானை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் முகமது ரிஜானின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களுக்கு கண்ணீரை வரவைழத்தது.
முகமது ரிஜான் உள்ளிட்ட குழந்தைகளுக்கு எந்த உணவை எப்படி சாப்பிட வேண்டும்? என்பது தெரியாது. நன்றாக இருக்கும் உணவுகளை அவர்கள் ஆர்வக்கோளாறில் அதிகம் சாப்பிட வாய்ப்புள்ளது. இதனால் இனி உங்களின் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு உணவு, ஸ்நாக்ஸ் வழங்கும்போது அருகே பெற்றோர் இருப்பது நல்லது. இதன்மூலம் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல் தவிர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications