திமுகவுடன் டீலிங்.. ஆட்சியமைக்க ப்ளான்? யாரோ கிளப்பி விட்டாங்க! பஞ்சாயத்தை முடித்து வைத்த எடப்பாடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக - அதிமுக கூட்டணி வைக்க முயன்றதாக கூறப்படும் விவகாரத்துக்கு முதல்முறையாக பதிலளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வெறும் கட்டுக்கதை என கூறினார். இதோடு, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களை வளைக்க தவெக தலைவர் விஜய் திட்டுமிட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

சேலம் ஓமலூரில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருடன் ஆலோசனையில் ஈடுபட்டபோது சில முக்கியத் தகவல்களை நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். குறிப்பாக தன் மீது வைக்கப்பட்ட திமுக - அதிமுக கூட்டணி பேச்சு குறித்து விளக்கியுள்ளார் எடப்பாடி.

Edappadi Palaniswami DMK Vijay TVK

அந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி," புதி​தாக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்ள தவெக அரசு, மேகதாது அணை கட்​டு​வதற்கு தனி தீர்​மானம் கொண்டு வந்​தது. இதில் நடு​வர் மன்​றம் அமைக்​கப்​படும் என்​பது தேவையற்​றது.
தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா? என்பதே பெரும் சந்தேகமாக இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி

ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களுக்காக எப்போதும் குரல் கொடுக்கும் இயக்கம் தான் அதிமுக. எங்கு எப்போது பேசினாலும் முதல்வர் விஜய் வார்த்தைகளை யோசித்து பயன்படுத்த வேண்டும். கரூரில் பேசிய முதல்வர் திமுக - அதிமுகவை கூட்டு களவாணிகள் என்றார். ஆனால், எங்களின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்களை திருடி, தனது கட்சியில் இணைத்து கொள்ளும் முதல்வர் விஜய் தான் உண்மையில் களவாணி.

விஜய்

நாலாந்தர பேச்சாளரின் பேச்சு போலத் தான் கரூரில் விஜய் பேசியது, இருந்தது. தேர்தலுக்கு முன் இரண்டு திராவிட கட்சிகள் சரியில்லை, ஆதலால் மாற்று சக்தி நான் என்று முழங்கிய முதல்வர் விஜய் அதில் ஒரு திராவிட கட்சியுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவோடு தான் ஆட்சியையே பிடித்து உள்ளார். அப்படி என்றால் விஜய் இரட்டை வேடம் போடுகிறாரா? 60 நாட்கள் ஆட்சியில் தவெக ஒன்றுமே செய்யவில்லை.

அதிமுக எம்எல்ஏக்கள்

ஆக்கப்பூர்வ வேலை எதுவும் செய்யாமல், வெறும் பஞ்ச் டயலாக் தான் பேசி வருகிறார். சிங்கப்பெண் படை என்பதெல்லாம் ஒரு ஷோ தான். மக்களுக்கு அதனால் எந்த நன்மையும் இல்லை. சட்டமன்ற உறுப்பினர்களை இரவல் வாங்கி தான் தனது ஆட்சியை விஜய் நடத்தி கொண்டிருக்கிறார். 4 கால்கள் இருந்தால் தான் நாற்காலி நிற்கும், விஜய்யின் முதல்வர் நாற்காலியில் ஒரு கால் இரவல் கால். கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான் காங்கிரஸ் கட்சியின் நிலைமை.

திமுக - அதிமுக கூட்டணி

நூற்றாண்டு கண்ட காங்கிரஸ் கட்சி பரிதாப நிலையில் தான் உள்ளது, திமுக கூட்டணியில் வெற்றி பெற்று தவெகவு-க்கு சென்று பதவி வாங்கியது தான் காங்கிரஸின் கொள்கையா? திமுக - அதிமுக கூட்டணி வைக்க முயன்றதாக கூறப்படும் விவகாரத்துக்கு முதல்முறையாக பதிலளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வெறும் கட்டுக்கதை என கூறினார்.

ஸ்டாலின்

2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு அதிமுகவும் திமுகவும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக சில அதிமுகவினரே கூறி வந்தனர். சில கட்சித் தலைவர்களும் அதை கூறியிருந்தனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியும் திமுக தலைவர் ஸ்டாலின் அது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தனர். இந்த நிலையில் தான் இந்த விவகாரத்தில் முதன்முறையாக எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+