காவு வாங்கிய AI.. செல்போன் உற்பத்தியை மொத்தமாக நிறுத்த முடிவெடுத்த பிரபல நிறுவனம்.. ஷாக் அறிவிப்பு
சியாட்டில்: ஏஐ வளர்ச்சி காரணமாகப் பல்வேறு நிறுவனங்களும் தங்கள் பிரதானத் தொழில்களை விட்டுவிட்டு ஏஐ பக்கம் திரும்பியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் சிரமத்தை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையே பிரபல அசுஸ் நிறுவனமும் இந்த டிரெண்டில் இணைந்துள்ளது. இதனால் அசுஸ் செல்போன்கள் இனி வெளிவராது.
செயற்கை நுண்ணறிவு தான் இப்போது சர்வதேச அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் விஷயமாக இருக்கிறது. இதனால் சர்வதேச அளவில் அனைத்து நிறுவனங்களுமே ஏஐ துறையில் ஆர்வம் காட்டி வருகிறது. முதலீடுகளும் மிகப் பெரியளவில் குவிந்து வருகிறது. ஏஐ துறையில் இருக்கும் வாய்ப்பைப் பார்த்துப் பல நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டியும் வருகிறது.

அசுஸ்
இதற்கிடையே அசுஸ் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் பிஸ்னஸை மூட உள்ளதாக அறிவித்துள்ளது. அதற்குப் பதிலாகச் செயற்கை நுண்ணறிவு மற்றும் பிஸ்னஸ் கம்யூட்டர்களில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக 2026ல் அசுஸ் நிறுவனத்திடம் இருந்து எந்தவொரு ஸ்மார்ட்போன்களும் வராது. குறிப்பாக கேமர்களிடையே பிரபலமான ROG ஃபோன் மற்றும் பக்கா ஆல்ரவுண்டர் என பெயரெடுத்த ஜென்போன் சீரிஸ் மாடல்களின் புதிய வெர்ஷன் வெளிவர வாய்ப்பில்லை.
மாறியது திட்டம்
தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற முடிவை எடுக்கும் முதல் நிறுவனம் அசுஸ் இல்லை. இதற்கு முன்பாகவே ரேம் ஸ்டோரேஜ்களை உற்பத்தி செய்யும் பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பு வியூகங்களை மாற்றியமைத்துள்ளன. செல்போன், கம்யூட்டர்களுக்கான ரேம்களை தயாரிப்பதை நிறுத்திவிட்டு, அவை AI டேட்டா சென்டர்களுக்குத் தேவையான என்டர்பிரைஸ்-நிலை மெமரி சிப்களை தயாரிப்பதில் முழுமையாகக் கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வரிசையில் தான் இப்போது அசுஸ் நிறுவனம் இணைந்துள்ளது.
ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுத்தப்படும் என்பதை அசுஸ் தலைவர் உறுதி செய்துள்ளார். அதற்குப் பதிலாக அசுஸ் நிறுவனம் தனது வளர்ச்சிக்காக AI சார்ந்த அமைப்புகள், ரோபோட்டிக்ஸ் மற்றும் தானியங்கி கம்யூட்டர் சாதனங்களில் அதிக முதலீடு செய்யும் எனத் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் விற்பனையை விட AI அமைப்புகளே சிறப்பான வளர்ச்சியைக் கொடுக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் AI தான்
பல்வேறு AI மாடல்கள் மற்றும் ஆபரேஷன்களுக்கு தேவையான AI சர்வர்களை உருவாக்க அசுஸ் திட்டமிட்டுள்ளது. இது ஒரு குறுகிய காலத் திட்டம் இல்லை.. இதுவே நிறுவனத்தின் எதிர்காலமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இனி வும் காலங்களில் புகழ்பெற்ற கேமிங் செல்போனான ROG செல்போன்கள் வராமலேயே போகலாம்.
அதேநேரம் அசுஸ் தனது தற்போதைய வாடிக்கையாளர்களை முழுமையாக விட்டுவிடவில்லை. தற்போதுள்ள ROG ஃபோன் மற்றும் ZenFone மாடல்களுக்கு தொடர்ந்து அப்டேட்டுகள் மற்றும் சேவை சப்போர்ட் கிடைக்கும் என்பதை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதாவது, அசுஸ் சாதனங்களைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு வழக்கமான சேவைகள் தொடர்ந்து கிடைக்கும்.
ஏன் சிக்கல்
ஏற்கனவே சாம்சங், எஸ்.கே. ஹைனிக்ஸ், மைக்ரான் போன்ற நிறுவனங்கள் வழக்கமான DDR5 ரேம் உற்பத்தியைக் குறைத்துவிட்டு ஏஐ சென்டர்களுக்கு தேவையான உற்பத்தியை அதிகரித்திருந்தன. இதனால் ரேம் விலை உயர்ந்திருந்தது. அசுஸை போல வேறு மேலும் சில நிறுவனங்கள் செல்போன் சந்தையைக் கைவிட்டுவிட்டு ஏஐ சந்தைக்குள் நுழைந்தால், ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இடையே போட்டி குறையும். இதனால் அதன் விலையும் ஏறும் ஒரு ஆபத்தான சூழல் உருவாகவே செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications