ஹெல்மெட் உடன் சேர்ந்த AI.. அடுத்த நொடி பெங்களூர் போலீஸுக்கு பறந்த 100+ புகார்கள்! எப்படி தெரியுமா?
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் AIஐ வைத்து புரட்சிகரமான கருவியை உருவாக்கியுள்ளார். பார்க்க சாதாரண ஹெல்மெட் போலத் தெரிந்தாலும் இது சாலையில் செல்வோர் செய்யும் விதிமீறல்களை போட்டோவாக எடுத்து நேரடியாக போலீசாருக்கே அனுப்பிவிடுமாம். அவரது இந்தக் கண்டுபிடிப்பு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
AI இந்தக் காலத்தில் ஒட்டுமொத்த உலகையும் புரட்டிப் போட்டுள்ளது. சில ஆண்டுகளில் AI மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துவிட்டது. மேலும், AI மனிதர்களுக்கு மிகப் பெரியளவில் உதவி வருகிறது. இதை வைத்து பல்வேறு தரப்பினரும் பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறார்கள்.

ஏஐ வல்லுநர்
அப்படித் தான் பெங்களூரை சேர்ந்த இஞ்சினியர் ஒருவர் AIஐ வைத்து புரட்சிகரமான கருவி ஒன்றை உருவாக்கியுள்ளார். அதாவது போக்குவரத்து விதிமீறலைக் கண்டறிய ஹெல்மெட் உடன் இணைத்து ஒரு ஸ்மார்ட் சாதனத்தை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் சாலையில் யார் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டாலும் அந்த ஹெல்மெட் தானாகக் கண்டறிந்து புகாரை அனுப்பிவிடுமாம். ரியல் டைமில் கண்காணித்து புகார் அனுப்பும் திறனை இது கொண்டு இருக்கிறது.
ஹெல்மெட்
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த பங்கஜ் தன்வார் என்பவர் இதை உருவாக்கியுள்ளார். இது தொடர்பாகத் தன்வார் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், "சாலையில் வண்டி ஓட்டும் போது ஏகப்பட்ட விதிமீறல்களை நான் பார்க்கிறேன். இதன் காரணமாகவே இப்போது என் தலைக்கவசத்தையே ஒரு டிராபிக் போலீஸ் சாதனமாக மாற்றிவிட்டேன். சாலைகளில் முட்டாள்தனமான வாகனங்களை இயக்கும் மனிதர்களால் சோர்வடைந்துவிட்டேன். எனக்கு இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், ஹெல்மெட் செயல்படும் விதத்தையும் அவர் விளக்கியுள்ளார். அவர் மேலும், "நான் வண்டியை ஓட்டும்போது, இந்த AI ஏஜெண்ட் ரியல் டைமில் சாலை விதிமீறல்களைக் கண்காணிக்கும். வண்டியை ஓட்டும்போதே யாராவது விதிமீறல் செய்தால் அதை போட்டோவாக எடுத்து, அந்த லெக்கேஷன் மற்றும் வாகனப் பதிவு எண்ணுடன் கூடிய ஆதாரங்களை நேரடியாகப் போலீசுக்கு அனுப்பிவிடும்" என்றார்.
பக்கா போட்டோ
அந்த ஏஐ ஹெல்மெட் எடுத்த சில படங்களைச் சில போட்டோக்களையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு போட்டோவில் ஹெல்மெட் அணியாமல் ஒருவர் டூவீலரை ஓட்டிய நிலையில், அதை இந்த ஏஐ ஹெல்மெட் போட்டோவாக எடுத்துள்ளது. மேலும், விதிமீறலில் ஈடுபட்டவரை சுற்றிச் சிவப்பு வட்டமும் போடப்பட்டது. மற்றொரு நபர் காரின் சன்ரூப் வழியாக நின்று கொண்டு பயணித்த நிலையில், அதையும் போட்டோவாக எடுத்துள்ளது. எங்கு இந்த சம்பவம் நடந்தது, வாகனப் பதிவு எண் என அனைத்துமே போலீஸுக்கு அனுப்பப்படுமாம்.
நெட்டிசன்கள்
அவரது இந்த போஸ்ட் இப்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இதைப் பாராட்டி வருகிறார்கள். இதுபோல 100 ஹெல்மெட் இருந்தாலே போதும் பெங்களூரில் பல ஆயிரம் விதிமீறல்களையும் விபத்துகளையும் தவிர்க்கலாம் என கமெண்ட் செய்துள்ளார். பெங்களூர் டிராபிக் போலீசாருமே கூட இந்தக் கண்டுபிடிப்பைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளது. அதேநேரம் மற்றொரு நெட்டிசன், " சாலைகளில் இருக்கும் குழிகளைப் புகாரளிக்க ஒரு வசதியைச் சேருங்கள்.. கொஞ்ச நேரத்தில் அதிகாரிகளின் இன்பாக்ஸ் நிரம்பி வழியும்" என்று பதிவிட்டுள்ளார்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications