ரூ.1.3 லட்சம் கோடி.. ஆந்திராவில் பிரம்மாண்ட AI மையத்தை அமைக்கும் கூகுள்.. இனி எல்லாமே மாறப்போகுது!
டெல்லி: ஏஐ துறையில் இப்போது பல்வேறு முதலீடுகள் குவிந்து வருகிறது. ஏஐ உட்கட்டமைப்பை மேம்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கூகுள் நிறுவனத்தின் பிரம்மாண்ட ஏஐ மையம் அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்
ஏஐ இப்போது மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஏஐ துறையில் மிகப் பெரிய முதலீடுகளும் குவிந்து வருகிறது. இதற்கிடையே கூகுள் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் செயற்கை நுண்ணறிவு (AI) மையத்தை நிறுவவுள்ளதாக அறிவித்துள்ளது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இந்த ஏஐ ஹப் அமைக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரம்மாண்ட ஏஐ மையம்
இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வளர்ச்சி என அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார். இந்தத் திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் சுந்தர் பிச்சை இன்று பேசியுள்ளார். இந்தத் திட்டம் சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் 1.3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாகும்.. 2026 முதல் 2030 வரை 5 ஆண்டுகளில் இத்திட்டம் படிப்படியாகச் செயல்படுத்தப்பட உள்ளது. இது கூகுள் நிறுவனத்தின் மிகப் பெரிய இந்திய முதலீடாக அமைகிறது. இந்த ஏஐ மையம், விசாகப்பட்டினத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு வலுச் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுந்தர் பிச்சை
இது தொடர்பாக சுந்தர் பிச்சை தனது எக்ஸ் பக்கத்தில், "கூகுள் நிறுவனம் விசாகப்பட்டினத்தில் முதல் ஏஐ மையத்தை அமைக்கவுள்ளது. இது தொடர்பாகப் பிரதமர் மோடியிடம் பேசினேன். ஜிகாவாட் அளவிலான கம்ப்யூட்டர் திறன், புதிய சர்வதேச கடலுக்கடி இணைய இணைப்பு மற்றும் பெரிய உள்கட்டமைப்பு ஆகியவற்றை இந்த மையம் ஒருங்கிணைக்கிறது.. இதன் மூலம் இந்தியாவின் தொழில் நிறுவனங்களுக்கும் பயனர்களுக்கும் கூகுளின் அதிநவீனத் தொழில்நுட்பம் கொண்டு செல்லப்படும். இது ஏஐ கண்டுபிடிப்புகளைத் துரிதப்படுத்தி, நாடு முழுவதும் வளர்ச்சியை ஊக்குவிக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
கடலுக்கு அடியில் கேபிள்
இதன் மூலம் விசாகப்பட்டினம் ஏஐ வளர்ச்சி மையமாக மட்டுமின்றி, ஒரு முக்கிய இணைப்பு வாயிலாகவும் செயல்படும். அதாவது நம்மில் பலரும் நினைப்பது போலப் பெரும்பாலும் இணையம் என்பது சாட்டிலைட் மூலம் கிடைப்பதில்லை.. அவை கடலுக்கு அடியில் இருக்கும் கேபிள்கள் மூலமாகவே கிடைக்கின்றன. உலகின் பல பெரு நிறுவனங்கள் இதற்காக கேபிள்களை கடலுக்கு அடியில் போட்டுள்ளன.
கூகுளும் அதுபோல கடலுக்கு அடியில் பல கேபிள்களை போட்டுள்ள நிலையில், அதற்கான உள்கட்டமைப்பையும் விசாகப்பட்டினத்தில் நிறுவி உள்ளது. அதாவது கடலுக்கு அடியில் இருக்கும் கூகுள் கேபிள்கள் இந்தியாவில் விசாகப்பட்டினத்தில் இணையும். இதன் மூலம் சர்வதேச நெட்வொர்க் உடன் விசாகப்பட்டினம் நேரடியாக இணைக்கப்படுகிறது.
கூகுள் சொல்வது என்ன!
இது தொடர்பாக கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்த இணைப்பு இந்தியாவில் அதிகரித்து வரும் டிஜிட்டல் தேவைகளைப் பூர்த்தி செய்யும். இப்போது மும்பை மற்றும் சென்னை பகுதிகளில் கடலுக்கடி கேபிள் இணைப்பு இருக்கும் சூழலில், அதற்கு ஒரு மாற்று வழியை இது நமக்குக் கொடுக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
டெல்லியில் கூகுள் நடத்திய 'பாரத் ஏஐ சக்தி' என்ற நிகழ்வில் இந்த ஏஐ ஹப் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. உலகின் 12 நாடுகளில் கூகுளின் சர்வதேச AI மையம் அமைக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், அஸ்வினி வைஷ்ணவ், ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, மற்றும் கூகுள் கிளவுட் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் குரியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சந்திரபாபு நாயுடு
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, "இந்தத் திட்டம் இந்தியாவின் டிஜிட்டல் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயமாக இருக்கும். இந்தியாவின் முதல் ஜிகாவாட் டேட்டா மையமும், கூகுளின் முதல் AI மையமும் எங்கள் மாநிலத்தில் அமைவதில் பெருமை கொள்கிறோம். இது புதுமை பல்வேறு நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப்களுக்கான நீண்ட கால சப்போர்ட்டை கொடுக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications