ChatGPT Caricature:டிரெண்டாகும் AI Caricature போட்டோவை எப்படி உருவாக்குவது? ஆபத்து இருக்கா?
சென்னை: சமூக வலைதளங்களில் தினமும் பல்வேறு விஷயங்கள் டிரெண்டாகி வருகின்றன. தற்போது இணையதளத்தில் சாட்ஜிபிடி பயன்படுத்தி உருவாக்கப்படும் ‛கேரிகட்டர்' போட்டோக்கள்(ChatGPT Caricuture) டிரெண்டிங்கில் உள்ளன. இந்த போட்டோக்களை எப்படி உருவாக்குவது? இந்த போட்டோவை உருவாக்குவதால் பிரச்சனை வருமா? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை ஒவ்வொரு நாளும் பல்வேறு விஷயங்கள் இணையதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. இப்போது ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவை சாதாரண மக்கள் முதல் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பலரும் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த ஏஐ தளங்களை பயன்படுத்தி போட்டோக்களை உருவாக்கி வருகின்றனர். அந்தவகையில் தான் தற்போது இணையதளங்களில் டிரெண்டிங்காகி இருக்கிறது ChatGPT Caricuture போட்டோ.
சாட்ஜிபிடி புது வசதி
இந்த கேரிகட்டர் ஆப்ஷனை பயன்படுத்தி ஒவ்வொருவரும் தாங்கள் செய்யும் பணியை குறிக்கும் வகையில் போட்டோக்களை உருவாக்கலாம். சரியான புராம்ட் கொடுக்கும் பட்சத்தில் நம் பணி சார்ந்த போட்டோவை சாட்ஜிபிடி தத்ரூபமாக அப்படியே உருவாக்கி கொடுக்கிறது. இந்த போட்டோக்கள் கார்ட்டூன் வடிவத்திலும் உருவாக்க முடியும்.
போட்டோ உருவாக்குவது எப்படி?
இந்த போட்டோவை நாம் உருவாக்க வேண்டும் என்றால் முதலில் நாம் சாட் ஜிபிடியை ஓபன் செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு நமது போட்டோவை அதில் பதிவேற்ற வேணே்டும். இந்த போட்டோ கிளியராகவும், ஹை குவாலிட்டியுடன் இருக்க வேண்டும். முகம் தெளிவாக தெரிய வேண்டும். நாம் நேராக பார்க்கும் படியான போட்டோவை பதிவேற்றம் செய்வது நல்லது.
அதன்பிறகு "Create a caricature of me and my job based on everything you know about me." என்ற புராம்ட்டை கொடுக்க வேண்டும். அதன்பிறகு நாம் பணி சார்ந்த அலுவலகம் சூழல் எப்படி இருக்கும்? அலுவலகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை விரிவாக எழுத வேண்டும்.
சில நொடிகளில் போட்டோ...
அதன்பிறகு dramatic or professional என்பதில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். அதேபோல் cartoons or webcomics வகையில் போட்டோ வேண்டும் என்றால் அதனையும் புராம்ட்டில் சேர்க்க வேண்டும். இது போதும். சில நொடிகளில் நம்முடைய Caricature போட்டோ நமக்கு கிடைத்துவிடும்.
ஒருவேளை முதலில் வரும் ரிசல்ட் சரியாக இல்லை என்றால் புராம்ட்டை மாற்றி மீண்டும் முயற்சி செய்யவும். நாம் ப்ராம்ட் கொடுப்பதை பொறுத்து தான் போட்டோ கிடைக்கும் என்பதால் அதில் கவனம் செலுத்த வேண்டும்.
அதன்பிறகு ரிசல்ட்டாக கிடைக்கும் போட்டோவை டவுன்லோட் செய்து சமூக வலைதளங்களில் பயன்படுத்தி Caricature டிரெண்ட்டில் நாமும் இணையலாம். இருப்பினும் இத்தகைய டிரெண்ட்டிங்கில் இணைவது ஆபத்தை விளைவிக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
பாதுகாப்பானதா?
ஏனென்றால் AI-generated caricatures போட்டோக்கள் உருவாக்கும்போது ஒவ்வொருவரின் போட்டோ, வேலை விவரம், நிறுவனம் பற்றிய பிற விஷயங்கள், தனிப்பட்ட தகவல்களை வழங்குவதால் அது சாட்ஜிபிடி ஏஐ-யால் சேமித்து வைக்கப்பட வாய்ப்புள்ளது.
சாட்ஜிபிடி ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயங்களை யாரிடமும் பகிர்வது இல்லை என்று இப்போது கூறினாலும் வருங்காலத்தில் ஆபத்தாக மாறலாம். இதனால் ஒவ்வொருவரும் கவனமாக இருப்பதுநல்லது. நமக்கு எந்த வகையிலும் பாதிப்பு வராத தகவல்களை மட்டும் புராம்ட்டாக கொடுப்பது நல்லது என்று வார்னிங் செய்துள்ளனர் நிபுணர்கள்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு












Click it and Unblock the Notifications