அள்ளி தரும் ஜியோ.. 18 மாதங்கள் ஒரு ரூபாய் கூட கட்ட தேவையில்லையாம்.. அப்படி என்ன இலவசம் தெரியுமா?
சென்னை: இந்தக் காலகட்டத்தில் ஏஐ வளர்வது மட்டுமின்றி, அதன் மூலம் வேறு பல துறைகளும் வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கிடையே இந்தியாவின் டாப் டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனம், கூகுள் ஜெமினி உடன் கைகோர்த்துள்ளது. இதன் மூலம் நாட்டின் பல லட்சம் இளைஞர்கள் சக்திவாய்ந்த ஏஐ டூல்களை பயன்படுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
இப்போது கிட்டத்தட்ட எல்லாத் துறைகளிலுமே ஏஐ வந்துவிட்ட நிலையில், அதை வைத்த மற்ற நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களை அதிகரிக்க முயன்று வருகிறது. இந்தியாவில் டெலிகாம் நிறுவனங்கள் அப்படித் தான் ஏஐ டூல்களுக்கு இலவச சந்தாவை அள்ளி கொடுத்து வருகிறது. ஏர்டெல் நிறுவனம் தனது யூசர்களுக்கு perplexity ஏஐ சந்தாவை இலவசமாக வழங்கி இருந்தது. இதற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

ஜியோ
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதியதொரு திட்டத்தை அறிவித்துள்ளது. GenZ எனப்படும் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களைக் குறிவைத்து ஜியோ இந்த புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒருவர் கூகுள் ஜெமினி ப்ரோ AI சந்தாவை இலவசமாகப் பெறலாம். 'ஜியோ யூத் ஆஃபர்' என்ற பெயரில் இத்திட்டம் குறித்து அந்நிறுவனம் தனது ட்விட்டரில் அறிவித்துள்ளது.
இதன் மூலம் யூசர்கள் 18 மாதங்களுக்கு ஜெமினி ப்ரோவை இலவசமாகப் பயன்படுத்த முடியும் என ஜியோ அறிவித்துள்ளது.. இந்த சந்தாவின் மொத்த மதிப்பு ₹35,100 ஆகும்.. அதைத் தான் ஜியோ தனது யூசர்களுக்கு இலவசமாக எந்தவொரு கட்டணமும் இல்லாமல் வழங்குகிறது.
ஜியோ யூத் ஆஃபர் விவரங்கள்
யாருக்கு வழங்கப்படும்: 18 முதல் 25 வயதுக்குட்பட்ட ஜியோ யூசர்கள்
ஆக்டிவேஷன் செய்வது எப்படி: ₹349 அல்லது அதற்கு மேற்பட்ட ஜியோவின் அன்லிமிடெட் 5G திட்டங்களை ரீசார்ஜ் செய்வோருக்கு இந்தச் சலுகை கிடைக்கும்
பயன்கள்: ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் 18 மாதங்களுக்கு ஜெமினி ப்ரோவை யூசர்கள் பயன்படுத்தலாம்
கூடுதல் ஸ்டோரேஜ்: ஜெமினி ப்ரோ மட்டுமின்றி, 2TB கூடுதல் கிளவுட் ஸ்டோரேஜையும் இலவசமாகப் பயன்படுத்தலாம்
அக்டோபர் 30ம் தேதி முதல் மை ஜியோ செயலியில் ரீசார்ஜ் செய்து இந்த அட்டகாசமான ஆஃபரை பெறலாம்
கூகுள் நிறுவனம் ஜியோவுடன் இணைந்து இதற்கான ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது. ஏஐ கருவிகளைப் பல லட்சம் இளைஞர்களிடம் எடுத்துச் செல்வதே இதன் பிரதான நோக்கமாகும்.

என்ன கிடைக்கும்
இந்தக் கூகுள் ப்ரோ சந்தா மூலம் 2.5 ப்ரோ, ப்ளஸ் மற்றும் டீப் ரிசர்ச் உள்ளிட்ட AI அம்சங்களை யூசர்கள் பயன்படுத்தலாம்.
ஏஐ வீடியோ: Veo 3 Fastஐப் பயன்படுத்தி சினிமா சீன், கதைகளைக் கூட உருவாக்கலாம். இது GenZ யூசர்கள் ஏஐ படங்களை உருவாக்க உதவும்!
நானோ பனானா: ஜெமினி மூலம் டிரெண்டிங்கில் இருந்த நானோ பனானா இமேஜ்களை உருவாக்கலாம்
அதிகரிக்கும் யூசர்கள்
யூசர்களை தன்வசம் இழுக்க ஜியோ நிறுவனம் இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாத டேட்டாவின்படி புதிய யூசர்களை பெறுவதில் நாட்டில் ஜியோ தான் டாப் இடத்தில் இருக்கிறது. அந்த ஒரு மாதத்தில் மட்டும் ஜியோ நிறுவனம் 2.12 லட்சம் வயர்லைன் மற்றும் 32.49 லட்சம் மொபைல் யூசர்களை புதிதாகச் சேர்த்துள்ளது. இதன் மூலம், ஜியோவின் மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை முதல் முறையாக 50 கோடி என்ற மைல்கல்லைத் தாண்டியுள்ளது. இப்போது ஜியோவின் மொத்தச் சந்தாதார்கள் எண்ணிக்கை 50.64 கோடியாக உயர்ந்துள்ளது.
-
ஐஆர்சிடிசி கேண்டீன்களில் ஏஐ கேமரா.. ரயில்களில் உணவு சாப்பிடுபவர்கள் அறிய வேண்டியவை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications