ஒன்இந்தியா "SPARK Originals" சேனலில் உருவான தத்ரூபமான AI காதல் பாட்டு! அசர வைக்கும் காட்சி விருந்து
சென்னை: செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் புதுமையான படைப்புகளை வழங்கும் ஒன்இந்தியா குழுமத்தின், "SPARK Originals" ஸ்டூடியோ, தனது புதிய AI இசை வீடியோவை தனது யூட்யூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. The Distance Between Us என்ற தலைப்பிலான இந்த வீடியோ, AI கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதுடன், அதன் தொழில்நுட்ப மற்றும் உணர்வுபூர்வமான ஆழத்தால் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இதுகுறித்து ஒன்இந்தியா தொழில்நுட்ப பிரிவின் தலைமை அலுவலர் டோனி தாமஸ் கூறுகையில், ஸ்பார்க் ஒரிஜினல்ஸ் ஸ்டூடியோவில் பல்வேறு வகையான ஏஐ வீடியோக்களை உருவாக்கி பல தரப்பினரின் பாராட்டுக்களை பெற்று வருகிறோம். அதன் ஒரு பகுதியாக, இப்படி ஒரு காதல் பாடல் காட்சியை சினிமா தரத்தில் உருவாக்கியுள்ளோம்.
ஆரம்பத்தில் வெறும் தொழில்நுட்ப பரிசோதனையாகத் தொடங்கப்பட்ட இந்த வீடியோவின் பின்னணியில், AI கருவிகளின் சினிமா சார்ந்த திறன்களை அறிவது ஒரு குறிக்கோளாக இருந்தது.

ஆனால், முதல் வடிவத்தைப் பார்த்த பிறகு, அதில் ஒரு உணர்வுத் தொடர்பு இல்லாததை உணர்ந்தோம். இதைச் சரிசெய்ய, வீடியோவின் கதை ஒரு காதல் கதையாக மாற்றியமைக்கப்பட்டது. இது வீடியோவின் முழு வடிவத்தையும் மாற்றியது.
வீடியோவில் பல கதாபாத்திரங்கள், சிக்கலான உணர்ச்சிப் பயணங்கள் மற்றும் வெவ்வேறு நிலப்பரப்புகளை காட்டியபடியே, காதல் மனநிலையின் தொடர்ச்சியைப் பராமரிப்பது சவாலானது. அதை உரிய இன்புட் கொடுத்து, AI கொண்டு சரி செய்தோம்.
ஒரு வருடம் முன்பு AI-யால் இத்தகைய நுட்பமான உணர்ச்சிக் கூறுகளைப் படம்பிடிக்க முடியும் என்று நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது. ஆனால் இதை சாத்தியப்படுத்தியுள்ளோம்.
காட்சிகள் மெருகேறியபோது, இசைக்கும் அதே உணர்வு இருக்க வேண்டும் என்று விரும்பினோம். சில வரிகளை எழுதி ஒன்இந்தியாவின் ப்ராடக்ட் பிரிவு தலைமை அதிகாரியான ஜோபோ குருவில்லாவிடம் கொடுக்க, சில மணிநேரங்களிலேயே ஐந்து அழகான பாடல்களை அவர் தயாரித்து அனுப்பினார். இதையடுத்து அட்டகாசமான வீடியோ ரெடியாகிவிட்டது. இதோ இந்த கட்டுரையுடன் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது, நீங்களும் பாருங்கள். வீடியோவில் நாம் கேட்கும் பாடல் உடனடியாக அனைவரையும் கவர்ந்திழுக்கும் இசையையும் கொண்டுள்ளது.
இந்த வீடியோவில் வரும் உணர்வுபூர்வமான காட்சிகள், நடிகர்களைத் தேர்ந்தெடுப்பது, ஒளிப்பதிவு, லைட்டிங், ஷாட்களை ஒருங்கிணைத்தல் போன்ற பல சிரமங்களை AI எளிதாக்கியுள்ளது. AI தொழில்நுட்பம் ஒரு மாயாஜாலக் காட்சியை உருவாக்கியுள்ளது.
"The Distance Between Us" வீடியோ, AI தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டாலும், காட்சி, இசை ஆகியவை உணர்வு ரீதியாக என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. "SPARK Originals" ஸ்டூடியோவின், யூட்யூப் சேனல் AI வீடியோக்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய AI இசை வீடியோ அதன் அசர வைக்கும் காட்சிகளால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
உங்களுக்கும் அசத்தலான ஏஐ வீடியோ வேண்டுமா?
ஐஏ தொழில்நுட்பத்தில் வீடியோக்களை உருவாக்கி தங்கள் வணிகத்தை பெருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது, ஆனால் நம்பகமான நிறுவனத்தை தேடுகிறீர்களா. கவலையை விடுங்க. ஒன்இந்தியாவின் ஸ்பார்க் ஸ்டூடியோ உங்களுக்கு உதவ ரெடியாக உள்ளது. மேலதிக தகவலுக்கு, [email protected] என்ற மெயில் ஐடிக்கு உங்கள் தேவைகளை அல்லது சந்தேகங்களை அனுப்பி வையுங்கள். உங்கள் பிஸினசில் அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகுங்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications