கூகுள் குரோம் கதை முடியுது.. களத்தில் இறங்கிய பெர்ப்ளெக்சிட்டி AIன் 'காமெட்' பிரவுசர்! கலக்குதே!
சென்னை: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் புதிய முன்னேற்றமாக, பெர்ப்ளெக்சிட்டி AI நிறுவனம் 'காமெட்' எனும் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் பிரவுசரை அறிமுகப்படுத்தியுள்ளது. குரோமியம் அடிப்படையிலான இந்த பிரவுசர், நவீன AI அம்சங்களுடன் தாறுமாறாக இருக்கிறது. இது விரைவில் கூகுள் குரோம் பிரவுசரை தூக்கி சாப்பிவிட்டுவிடும் என்று சொல்லப்படுகிறது.
இன்டர்நெட் அறிமுகமானதில் இருந்து பல்வேறு பிரவுசர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால் என்னதான் இருந்தாலும் கூகுள் குரோம் பிரவுசரை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. பிரேவ், ஆனியன் உள்ளிட்ட பிரவுசர்கள் இருந்தாலும் அது, கூகுள் குரோம் அளவுக்கு வரவில்லை. இப்படி கொண்டாடப்பட்ட குரோம் தற்போது தனுது வேலையை காட்டி வருகிறது. எதை சர்ச் செய்ய வேண்டும் என்றாலும் அப்படியே லோட் ஆகி கடுப்பேற்றுகிறது. இதெற்கெல்லாம் ஒரு விடிவுக்காலம் பிறக்காதா? என்று ஏங்கிக்கொண்டிருந்தபோதுதான் காமெட் பிரவுசர் என்ட்ரி கொடுத்திருக்கிறது.

காமெட் பிரவுசரில் உள்ள சிறப்பம்சம் அதன் செயற்கை தொழில்நுட்ப சைட்பார்தான். இது பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்கிறது. உதாரணமாக கட்டுரையை சுருக்கி தருதல், மின்னஞ்சல்களை உருவாக்குதல், சந்திப்புகளை பதிவு செய்தல் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து வேலைகளையும் ஒரே நேரத்தில் இதனால் செய்ய முடியும்.
கூகுள் குரோமை விட்டு தள்ளுங்க
கூகுள் குரோம் பயன்படுத்துகிறோம் எனில், அதில் டேப்கள் இருக்கும். பல டேப்கள் திறக்கப்படும் பொழுது கணினி அதன் வேகத்தை குறைத்துக் கொள்ளும். ஆனால் இந்த பிரவுசரில் ஒர்க்ஸ்பேஸ் எனும் புதிய அம்சம் உள்ளது. இது தேவையான டேப்களை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றதை தவிர்த்து விடுகிறது. இதனால் குழப்பம் குறைகிறது.
தனித்துவமான பிரவுசர்
மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், இந்த பிரவுசர் கூகுளின் குரோமியம் தளத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதனால் கூகுள் குரோமில் நீங்கள் பயன்படுத்திய புக் மார்க்குகளை இந்த பிரவுசரிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல ஒரு பயனர் தகவல்களைத் தேடும் பொழுது பொதுவான தகவல்களை கொடுக்காமல், அந்தப் பயனரின் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப தனித்துவமான தகவல்களை வழங்குகிறது.
இந்த பிரவுசரில் ஒரு பொருட்களை வாங்க தேடும்போது, அதன் விலைகளை மற்ற விற்பனை தளங்களுடன் ஒப்பிட்டு நமக்கு காட்டும். அதே போல கட்டுரைகள் மற்றும் எழுத்து கண்டெண்டுகள் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யவும் அதை மேம்படுத்தவும் பரிந்துரைக்கிறது.
எதில் பயன்படுத்த முடியும்?
இது விண்டோஸ் மற்றும் மேக் ஓஎஸ் ஆகியவற்றுக்கு சப்போர்ட் செய்கிறது. செல்போனில் பயன்படுத்தும் பொழுது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் தளத்திலும் இயங்குகிறது. இந்த பிரவுசரை பயன்படுத்த பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ சந்தா தேவை. இருப்பினும் ஏர்டெல் பணியாளர்களுக்கு ஒரு வருடத்திற்கு இலவச சந்தா வழங்கப்படுகிறது.
பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ அல்லது மேக்ஸ் திட்டத்தில் உள்ள பயனர்கள் தங்கள் கணக்கில் உள்நுழைய வேண்டும். பின்னர், பெர்ப்ளெக்சிட்டியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து காமெட் பிரவுசரை பதிவிறக்கம் செய்து நிறுவலாம். ஆண்ட்ராய்டு பயனர்கள் முன்கூட்டிய ஆர்டர் இணைப்பைப் பயன்படுத்தலாம்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications