Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே ஒரு AI போட்டோ.. பிரபல நிறுவனத்தையே ஏமாற்றிய பலே இளைஞர்! குழம்பிய நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் நமது வாழ்க்கையை எளிதாக்குகிறது. ஆனால் சில சமயங்களில் அதே தொழில்நுட்பத்தைச் சிலர் தவறாகவும் பயன்படுத்துகிறார்கள். இதனால் மோசமான விளைவுகளும் ஏற்படுகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. இது குறித்து நெட்டிசன் பதிவிட்ட போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே ஏஐ உலகையே மெல்ல மாற்றி வருகிறது. பல்வேறு துறைகளிலும் ஏஐ ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு பல வழிகளில் மனிதர்களுக்கு மிகப் பெரியளவில் உதவியுள்ளது. அதேநேரம் சிலர் இதைத் தவறாகவும் பயன்படுத்தவே செய்கிறார்கள். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

Swiggy Instamart User Fakes Cracked Eggs with Google Gemini Nano AI Gets Full Refund within seconds
Photo Credit:

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்

அதாவது சமீபத்தில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் நிறுவனத்தின் கஸ்டமர் சப்போர்ட் டீமை வாடிக்கையாளர் ஒருவர் AI மூலம் ஏமாற்றி பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளார். இது தொடர்பான போஸ்ட் ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த நபர் ஸ்விக்கியில் முட்டை ஒரு ட்ரே ஆர்டர் செய்துள்ளார். அதில் ஒரு முட்டை மட்டுமே உடைந்துள்ளது. அதை நேரடியாகப் புகாராக அளிப்பதற்குப் பதிலாக அதைப் போட்டோ எடுத்து கூகுள் ஜெமினியில் போட்டுள்ளார். ஒரு முட்டைக்குப் பதிலாகப் பல முட்டைகள் உடைந்து இருப்பது போன்ற போட்டோவை அதில் உருவாக்கியுள்ளார்.

போலி போட்டோ

பிறகு அந்த போட்டோவை ஸ்விக்கி கஸ்டமர் சப்போர்ட்டிற்கு அனுப்பியுள்ளார். அவர்களும் இதை உண்மையான போட்டோ என நினைத்து முழு பணத்தைத் திரும்பக் கொடுத்துள்ளனர். பொதுவாக கஸ்டமர் சப்போர்ட் டீமிற்கு குறுகிய காலத்தில் அதிகப்படியான புகார்கள் வரும். இதனால் ஒவ்வொரு போட்டோவையும் தீவிரமாக ஆய்வு செய்ய முடியாது. அதை வைத்தே இந்த நபர் ஏமாற்றியுள்ளார்.

என்ன நடந்தது

இது தொடர்பாக கபிலேஷ் என்ற நபர் தனது ட்விட்ரில், "இன்ஸ்டாமார்ட்டில் ஒருவர் முட்டைகளை ஆர்டர் செய்த நிலையில், அதில் ஒரு முட்டை மட்டுமே உடைந்த நிலையில் வந்துள்ளது. அதைப் பற்றி புகார் அளிக்காமல்.. அந்த நபர் ஜெமினி நானோ AI மூலம் பல முட்டைகள் உடைந்து இருப்பதைப் போல இமேஜை உருவாக்கியுள்ளார். சில நொடிகளில் அந்த ஏஐ டூல் 20+ முட்டைகள் உடைந்திருப்பது போன்ற போட்டோவை உருவாக்கிக் கொடுத்துள்ளது. இதைப் பார்த்தால் உண்மையாகவே முட்டைகள் உடைந்து இருப்பது போலத் தோன்றின.

கஸ்டமர் சப்போர்ட்ட டீம் இந்த போட்டோ ஆதாரத்தைப் பார்த்தவுடன், ஆர்டர் செய்த பணத்தை முழுமையாகத் திரும்பக் கொடுத்துள்ளனர். ஒரு நொடி யோசித்துப் பாருங்கள். உலகில் இப்போது போட்டோவை தான் ஆதாரமாகக் கொண்டு பல விஷயங்கள் செய்கிறார்கள். ஆனால், இப்போது ஏஐ காலத்தில் அதை நம்ப முடியாத நிலை இருக்கிறது. ஒரு சதவீத வாடிக்கையாளர்கள் இந்த முறையில் ஏமாற்ற தொடங்கினாலும் கூட, டெலிவரி நிறுவனங்கள் மொத்தமாக அழியும். AI Vs AI என்ற காலகட்டத்தில் நாம் இப்போது நுழைந்துள்ளோம்" எனப் பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள்

அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டானது. பலரும் இதை ஆச்சரியமாகவே பார்த்தனர். அதேநேரம், இது தவறான செயல் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டனர். இதன் மூலம் வரும் காலங்களில் உண்மையாகவே பிரச்சினை ஏற்பட்டாலும் கூட ரீபண்ட் வாங்குவதில் சிரமம் ஏற்படும் எனத் தெரிவித்தனர். இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "இனி டெலிவரி ஊழியர்களுக்கும் கோப்ரோ கேமராவுடன் தான் டெலிவரி செய்ய வேண்டும் போல.! அதுவும் அவர்களை எல்லா பொருட்களையும் திறந்து பார்த்து கொடுக்கும் சூழலும் கூட உருவாகும்" எனப் பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+