சர்வ நாசத்தை ஏற்படுத்த போகுது AI.. 2008 பேரழிவை முன்கூட்டியே கணித்த பெர்ரி நேரடியாக தந்த எச்சரிக்கை
சியாட்டில்: கடந்த சில ஆண்டுகளாகவே AI சந்தை தாறுமாறாக உயர்ந்து புதிய உச்சத்திற்குப் போய் வருகிறது. இதற்கிடையே AI நிறுவனங்களின் அதீத முதலீடுகளால் அவை பப்பிள் நிலைக்குப் போய் இருக்கலாம் என்று "தி பிக் ஷார்ட்" முதலீட்டாளர் மைக்கேல் பர்ரி எச்சரித்துள்ளார். 2008 அமெரிக்க ரியல் எஸ்டேட் பப்பிளை முன்கூட்டியே கணித்திருந்த இவரது கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
2025ஆம் ஆண்டில் தொழில்நுட்பத் துறையை ஆட்டிப்படைத்த மிக முக்கியமான விவாதம் செயற்கை நுண்ணறிவு தான். அதிலும் AIக்கு பல்வேறு பக்கங்களில் இருந்தும் முதலீடுகள் குவிந்து வருகிறது. ஏஐ என்று சொன்னாலே முதலீடுகளைக் கொட்டிக் கொடுக்க முதலீட்டாளர்கள் ரெடியாக இருக்கிறார்கள். இதனால் ஏஐ சார்ந்த நிறுவனங்கள் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.

ஏஐ பப்பிள்
இதற்கிடையே AI இப்போது ஒரு பப்பிள் என்ற நிலையை அடைந்துவிட்டது.. அது எப்போது வேண்டும் என்றாலும் வெடிக்கலாம் என்பதே அவர்கள் அச்சம். அதுபோல ஏஐ பப்பிள் வெடித்தால் மிக மோசமான பொருளாதார அழிவு ஏற்படும் என்பதாலேயே பலரும் இதை எச்சரிக்கையாக அணுகுகிறார்கள். அது சரி முதலில் இந்த பப்பிள் என்றால் என்னவென்று நாம் பார்க்கலாம்.
ஒரு விஷயத்தை அசல் மதிப்பைக் காட்டிலும் பல மடங்கு ஏற்றுவதே பப்பிள் என்பார்கள். பப்பிள் உடையும்போது மிக மோசமாகச் சந்தை சரியும். 1990களின் இறுதியில் இப்படி டாட் காம் பப்பிள் ஏற்பட்டு இருந்தது. அப்போது தான் இணையம் மெல்லப் புழக்கத்திற்கு வந்த நிலையில், ஏகப்பட்ட நிறுவனங்கள் இணையதளங்களில் முதலீடு செய்ய ஆரம்பித்தன. சிறு சிறு இணைய நிறுவனங்களும் கூட பல நூறு கோடி முதலீடுகளைப் பெற்றன. 2000களின் தொடக்கத்தில் டாட் காம் பப்பிள் எதிர்பாராத வகையில் வெடித்தது. இதனால் உலகெங்கும் பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.
அச்சம்
2008ல் அமெரிக்க ரியல் எஸ்டேட் சந்தையிலும் கூட இதுபோலத் தான் ஒரு பப்பிள் ஏற்பட்டு, அது வெடித்த போது சர்வதேச பொருளாதார மந்தநிலை உருவானது. இந்தச் சூழலில் தான் மீண்டும் பப்பிள் குறித்த விவாதம் எழுந்துள்ளது. செயற்கை நுண்ணறிவில் செய்யப்பட்ட முதலீடுகள், அந்த நிறுவனங்களின் மதிப்பையும் ஒப்பந்தங்களையும் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளன. இது பப்பிள் வெடிப்புக்கான அச்சத்தைச் சிலரிடையே எழுப்பியுள்ளது.
ஏஐ நிறுவனங்கள்
ஒரு பக்கம் ஓபன்ஏஐ, என்விடியா போன்ற முன்னணி நிறுவனங்கள் கிளவுட் கட்டமைப்பு நிறுவனங்களுடன் பெரிய ஒப்பந்தங்களைச் செய்துள்ளன. மறுபுறம் அமேசான், மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் டேட்டா சென்டர்களை உருவாக்கப் பல பில்லியன் டாலர்களைச் செலவிடுகின்றன. இன்னொரு பக்கம் ஏஐக்கான சிப்களை தயாரிக்கும் நிறுவனங்களின் மதிப்பும் எங்கோ உச்சத்திற்குப் போய்விட்டது.
இத்தகைய அதிகப்படியான செலவுகள் தான் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தரப்பினர் முதலீடுகள் அதிகம் வருகிறது என்பது உண்மை தான் என்றாலும் அது பப்பிள் என்றோ அது சீக்கிரம் உடையும் என்றோ சொல்ல முடியாது என்கிறார்கள். அதேநேரம் மற்றொரு தரப்பினர் இது குறித்து முக்கியமான எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.
"தி பிக் ஷார்ட்" முதலீட்டாளர்
அதிலும் குறிப்பாக 2008 அமெரிக்க ரியல் எஸ்டேட் நெருக்கடியை முன்கூட்டியே கணித்து அதில் பெரும் தொகையைச் சம்பாதித்த "தி பிக் ஷார்ட்" முதலீட்டாளர் மைக்கேல் பர்ரி உட்பட பலர் ஏஐ வளர்ச்சி நிலையாக இருக்க வாய்ப்பு குறைவு என்றே சொல்கிறார்கள். ஏஐயில் இப்போது குவியும் முதலீடுகளை, டாட்-காம் பப்பிளுடன் அவர் ஒப்பிடுகிறார்.
இது குறித்து முன்பு அவர் தனது ட்விட்டரில், "சில சமயங்களில், நாம் பப்பிள்களை பார்க்கிறோம். சில சமயங்களில், அதில் ஏதாவது நாம் செய்ய வேண்டியிருக்கும். சில சமயங்களில், அதில் உள்ளே போகாமல் இருப்பதே வெல்ல ஒரே வழியாக இருக்கும்" எனப் பதிவிட்டுள்ளார். ஏஐ சந்தை வெடிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே அவர் இந்தக் கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications