அதிரவிடும் க்ரோக் AI.. நீங்கள் கற்பனை செய்து பார்க்காத அம்சம் இலவசமாம்! ஆனால் கடைசியில் ஒரு ட்விஸ்ட்
சியாட்டில்: எலான் மஸ்க்கின் க்ரோக் ஏஐ தளத்தில் இப்போது புதிதாக 'இமேஜின்' என்ற அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் டெக்ஸ்ட், வாய்ஸ், அல்லது ஒரு போட்டோ மூலம் ஏஐ வீடியோக்கள் அல்லது போட்டோக்களை நம்மால் உருவாக்க முடியும். இந்த அட்டகாசமான வசதியைப் பயனர்கள் இலவசமாகப் பயன்படுத்தலாம் என்று க்ரோக் நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும், இதில் ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தக் காலகட்டத்தில் ஏஐ நிறுவனங்கள் வேகமாக புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. ஏஐ துறையைப் பொறுத்தவரை இப்போது கடும் போட்டி நிலவுவதால் யூசர்களை கவரத் தங்களால் முடிந்த வரை எல்லா அம்சங்களையும் ஏஐ நிறுவனங்கள் கொடுத்து வருகிறது. இதற்கிடையே க்ரோக் நிறுவனம் புதிதாக இமேஜின் என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய ஏஐ வசதி
இதன் கீழ் யூசர்கள் டெக்ஸ்ட, வாய்ஸ் அல்லது படங்களைப் பயன்படுத்தி ஏஐ போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கலாம். முன்பு ஐஓஎஸ் பயனாளர்கள் மட்டுமே இந்த அம்சம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இலவசமாகக் கிடைக்கிறது. இதன் கீழ் எளிய கமெண்ட் மூலம் AI போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்க முடியும்.
ஒரு ட்விஸ்ட்
இது தொடர்பாக முக்கிய அறிவிப்பை எலான் மஸ்க் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த அம்சம் இலவசம் தான் என்றாலும் எப்போதுமே இலவசமாக இருக்கும் என சொல்ல முடியாது. குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இது இலவசமாக இருக்குமாம்.. அதன் பிறகு ப்ரீமியம் பேக்கிற்கு மாறிவிடுமாம். இதை எலான் மஸ்க் உறுதி செய்துள்ளார்.
என்ன செய்யலாம்
"க்ரோக் இமேஜின்" கீழ் வெறும் ஓரிரு லைன்களை டைப் செய்து ஏஐ போட்டோவை உருவாக்கலாம்.. அதேபோல போட்டோவை அப்லோடு செய்தும் , அதை வீடியோவாக மாற்றலாம். இதையெல்லாம் ஓரிரு நொடிகளில் உருவாக்கும் பவர்புல்லான ஒரு டூலாக இந்த இமேஜின் இருக்கிறது. ஏற்கனவே யூசர்கள் சுமார் 4.4 கோடி போட்டோக்கள் இதன் மூலம் உருவாக்கியுள்ளதாகவும் இந்த நம்பர் இன்னுமே கூட அதிகரித்து வருவதாகவும் எலான் மஸ்க் தெரிவித்தார்.
சாட்ஜிபிடி மற்றும் கூகுள் ஜெமினி உள்ளிட்ட ஏஐ மாடல்கள் ஏற்கனவே போட்டோ மற்றும் வீடியோ உருவாக்கும் சேவைகளை வழங்குகின்றன. க்ரோக்கில் இந்தச் சேவை இல்லாமல் இருந்த நிலையில், இப்போது இமேஜின் மூலம் அந்த அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது.
க்ரோக் இமேஜினைப் பயன்படுத்துவது எப்படி?
முதலில் இதற்கு க்ரோக் செயலி தேவை. ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோரிலும், ஐபோன் ஆப் ஸ்டோரில் இதை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். ஒருமுறை செயலியை டவுன்லோடு செய்துவிட்டால் அதன் பிறகு எல்லாமே ஈஸி.
- முதலில் க்ரோக் செயலியை ஓபன் செய்து, மேல் மெனுவில் இருந்து 'இமேஜின்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- நீங்கள் உருவாக்க விரும்பும் படத்திற்கான டெக்ஸ்ட்டை டைப் செய்யுங்கள்
- டெக்ஸ்ட் மட்டுமின்றி போட்டோவை கூட இன்புட்டாக கொடுக்கலாம். அவ்வளவு தான் நொடிகளில் உங்கள் ஏஐ போட்டோ உருவாகிவிடும்.
வீடியோ உருவாக்குவது எப்படி
இந்த ஏஐ போட்டோவை வைத்து, அதை வீடியோவாக கூட மாற்றலாம். இந்த ஆப்ஷனில் சில நொடிகள் வரை ஓடும் வீடியோவை நம்மால் உருவாக்க முடியும். இதற்கு இமேஜ் ரெடியான உடன் 'Make video' என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் 4 வெவ்வேறு வகையான ஆப்ஷன்கள் இருக்கும். தேவையான அனிமேஷனை தேர்வு செய்தால் நொடிகளில் வீடியோ வந்துவிடும்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications