ஐடி துறைக்கு தான் ஆப்பு.. ஏஐ-ஆல் ஒயிட் காலர் வேலைகள் காலியாகப் போகுது! வார்னிங் தந்த டெக் ஜாம்பவான்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் ஐடி, பேங்கிங் போன்ற வெள்ளைக்கலர் பணிகளுக்கு பெரிய சவால் காத்திருக்கிறது என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சி எதிர்பார்த்ததை விட வேகமாக வேலைவாய்ப்பு சந்தையை மாற்றப் போகிறது என்றும், அதற்கு உலக அரசாங்கங்கள் இன்னும் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டாவோஸில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில், ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய பில் கேட்ஸ், "இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளில் வெள்ளைக்கலர் பணிகளிலும், சில அளவில் நீலக்கலர் பணிகளிலும் கூட பெரிய மாற்றங்கள் ஏற்படும்.

இந்த மாற்றங்களால் உருவாகும் பல பிரச்சனைகளை உலக அரசாங்கங்கள் சமாளிக்க வேண்டிய கட்டாயம் வரும். ஏஐ தொழில்நுட்பம் மருத்துவம், கல்வி உள்ளிட்ட துறைகளில் பெரிய நன்மைகளை தரும் என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும், வேலைவாய்ப்புகள், நியமன முறைகள் மற்றும் பொருளாதார சமநிலை ஆகியவற்றில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.

AI White Collar Jobs Bill Gates

பில் கேட்ஸ் எச்சரிக்கை

இந்த மாற்றங்களை கட்டுப்படுத்தாமல் விட்டால், பணியாளர்களுக்கிடையேயான இடைவெளி மேலும் அதிகரிக்கக்கூடும். இதனை எதிர்கொள்ள நாம் நமடு மக்களுக்கு பயிற்சி அளிக்கிறோமா? என்றால் அதுதான் இல்லை. வரி அமைப்புகளில் மாற்றம் கொண்டு வருகிறோமா? அதுவும் இல்லை. இதுவரை AI-யின் தாக்கம் பெரிதாக தெரியவில்லை. ஆனால் அது நீண்ட காலம் இப்படியே இருக்காது. இது எதிர்கால ஆபத்தை சுட்டிக்காட்டுவதாகவே பார்க்கப்படுகிறது.

ஒயிட் காலர் வேலைகள்

பில் கேட்ஸ் எழுதிய சமீபத்திய 'தி இயர் அகெட்' (The Year Ahead) என்ற அறிக்கையிலும் இதே கருத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். முந்தைய தொழில்நுட்ப புரட்சிகளை விட AI மிக வேகமாகவும், சமூகத்தின் பல துறைகளிலும் ஆழமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மாற்றங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு வேகமாக நடைபெறுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏஐ வேலைவாய்ப்பு பாதிப்பு

ஏற்கனவே மென்பொருள் துறையில் AI பயன்பாடு உற்பத்தித் திறனை அதிகரித்து வருவதுடன், லாஜிஸ்டிக்ஸ், கால் சென்டர் போன்ற துறைகளில் குறைந்த திறன் தேவைப்படும் பணிகளை மாற்றத் தொடங்கியுள்ளதாகவும் பில் கேட்ஸ் சுட்டிக்காட்டினார். இந்த மாற்றங்களை சரியாக கையாளவில்லை என்றால், செல்வமும் வாய்ப்புகளும் சிலரிடமே குவியும் நிலை உருவாகி, சமூக சமத்துவம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்திருந்தார்.

இந்தியா-அமெரிக்கா உறவு

இந்த சவால்களை எதிர்கொள்ள தனிப்பட்ட நாடுகளின் முயற்சி மட்டுமே போதாது என்றும், சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த கொள்கைகள் தேவை என்றும் பில் கேட்ஸ் வலியுறுத்தினார். தற்போதைய உலக அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியா-அமெரிக்கா உறவு முக்கியமான நிலைத்த ஆதாரமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். "அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு வலுவாக இருப்பது இயல்பானது. அந்த தர்க்கமே இறுதியில் வெல்லும்" என்று கூறிய பில் கேட்ஸ், இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் AI தொழில்நுட்பத்தை வேகமாக ஏற்றுக்கொள்ளும் திறன் ஆகியவை எதிர்காலத்தில் பெரிய பலமாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.

செயற்கை நுண்ணறிவு சந்தை

சமீபத்திய நாட்களில் உலகளாவிய ஐடி துறை, பேங்கிங் உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஏஐ ஆதிக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஐடி துறை பணியாளர்கள் வேலை இழப்பு அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் டெக் துறையின் ஜாம்பவானான பில்கேட்ஸ் எதிர்காலத்தில் ஏஐ-ஆல் ஒயிட் காலர் வேலைகள் கடும் பாதிப்பை சந்திக்க கூடும் என எச்சரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+