கியர் மாறுதே! AI துறைக்கு தலைவராக இந்தியரை நியமித்த ஆப்பிள்! பெங்களூரில் படித்தவராம்! இனிதான் ஆட்டமே
சியாட்டில்: ஆப்பிள் நிறுவனம் இப்போது ஏஐ துறையில் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளது. இதற்கிடையே அந்தப் பிரிவை வழிநடத்தக் கூகுள் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமர் சுப்ரமண்யாவை ஆப்பிள் வேலைக்கு அமர்த்தியுள்ளது. யார் அவர்.. ஆப்பிள் நிறுவனத்திற்கு அவரது நியமனம் ஏன் முக்கியம் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஏஐ இப்போது படுவேகமாக வளர்ந்து வருகிறது. எல்லா நிறுவனங்களுமே ஏஐ துறையில் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக மிகப் பெரிய முதலீடுகளையும் செய்து வருகிறது. மைக்ரோசாப்ட், மெட்டா, கூகுள் எனப் பல்வேறு நிறுவனங்களும் பணத்தைக் கொட்டி வருகிறது. இருப்பினும், ஆப்பிள் நிறுவனம் மட்டும் இதில் பின்தங்கியே இருக்கிறது.

கியரை மாற்றும் ஆப்பிள்
ஏஐ முக்கியத்துவத்தை உணர்ந்து இப்போது தான் ஆப்பிள் தனது கியரை மாற்ற ஆரம்பித்துள்ளது. ஏஐ ஆய்வுகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.. இதற்காக ஆப்பிள் நிறுவனம் இப்போது தனது செயற்கை நுண்ணறிவுப் பிரிவின் துணைத் தலைவராக மூத்த ஆய்வாளரும், மைக்ரோசாஃப்ட் முன்னாள் நிர்வாகியுமான அமர் சுப்ரமண்யாவை நியமித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தில் ஏழு ஆண்டுகளாக மேஷின் லெர்னிங்) மற்றும் ஏஐ பிரிவை ஜான் கியானந்த்ரியா வழிநடத்தி வந்த நிலையில், இப்போது அவருக்குப் பதிலாக அமர் அந்தப் பொறுப்பை ஏற்கிறார். அடுத்தாண்டு ஓய்வு பெறும் வரை கியானந்த்ரியா ஆப்பிள் ஏஐ பிரிவுக்கு ஆலோசகராக இருப்பார்
அமர் சுப்ரமண்யா
ஆப்பிளில் சேரும் முன், அமர் சுப்ரமண்யா மைக்ரோசாஃப்ட்டில் சில காலம் AI கார்ப்பரேட் துணைத் தலைவராக இருந்தார். அதற்கு முன்பு, அமர் சுப்ரமண்யா கூகுள் நிறுவனத்தில் 16 ஆண்டுகள் பணியாற்றினார். ஜெமினி டிஜிட்டல் அசிஸ்செண்ட் பிரிவு தலைவராக இருந்தார்.
அமர் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் துறையில் 20+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். அவர் 1997-2001இல் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் பொறியியல் இளங்கலைப் பட்டமும், 2009இல் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். 2001இல் IBM இல் மென்பொருள் பொறியாளராகச் சேர்ந்து, பத்து மாதங்கள் பணியாற்றினார்.
மைக்ரோசாப்ட், கூகுள்
மைக்ரோசாஃப்ட்டில் ஓராண்டு பணியாற்றிய பின், 2009இல் கூகுளில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு இணைந்தார். அங்கு ஆராய்ச்சி விஞ்ஞானி, முதன்மைப் பொறியாளர், ஜெமினி துணைத் தலைவர் எனப் பல்வேறு பொறுப்புகளை அமர் வகித்துள்ளார். பிறகு கடந்த ஜூலை மாதம் கூகுள் நிறுவனத்தில் இருந்து மீண்டும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு AI கார்ப்பரேட் துணைத் தலைவராகப் பணியாற்றினார். இருப்பினும், சில மாதங்களிலேயே இப்போது அதில் இருந்து விலகி ஆப்பிள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
மாற்றம் வருமா?
ஏஐ துறையைப் பொறுத்தவரை மற்ற நிறுவனங்களை விட ஆப்பிள் பின்தங்கியே இருக்கிறது. இன்னுமே கூட அவர்களின் சிரி டிஜிட்டல் அசிஸ்டெண்ட் மற்ற நிறுவனங்களை விட பின்தங்கியே இருக்கிறது. இதற்காகச் சில ஆண்டுகளாகவே கியானந்த்ரியா மீது கடுமையான விமர்சனங்கள் இருந்தது. மேலும், அவருக்குப் பதிலாக ஏஐ துறையை வழிநடத்த வேறு ஒருவரைக் கொண்டு வர வேண்டும் என்ற குரல்களும் அதிகரித்தன. அதைத் தொடர்ந்தே அமர் சுப்ரமண்யாவை இப்போது ஆப்பிள் நிறுவனம் உள்ளே கொண்டு வந்துள்ளது. அவரது தலைமையில் ஆப்பிள் நிறுவனம் ஏஐ துறையில் விட்ட இடத்தைப் பிடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
Claude Fable 5: வங்கிகளை மொத்தமாக முடக்கும் திறன் கொண்ட AI..? அமெரிக்க அரசு உத்தரவால் ஆந்த்ரோபிக் ஷாக்! -
62 வயது.. ஸ்கிராச்சில் இருந்து துவங்கும் ஜெப் பெசோஸ்.. அதென்னப்பா Prometheus! -
"AI மனித கட்டுப்பாட்டை மீறும்.." அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? AI நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications